Monday, February 10, 2025
spot_img
HomeCinemaமாஸ்டர் செஃப் இந்தியா தமிழின் இம்யூனிட்டி சவாலில் சமையல் கலை ஜுவாலையை எழுப்பும் மாஸ்டர் செஃப்...

மாஸ்டர் செஃப் இந்தியா தமிழின் இம்யூனிட்டி சவாலில் சமையல் கலை ஜுவாலையை எழுப்பும் மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா சஷி செலியா!

Published on

மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலிய சீசன் 10-இன் வெற்றியாளரான புகழ்பெற்ற செஃப் சஷி செலியா, இந்த சீசனின் முதல் இம்யூனிட்டி பின் சவாலைத் தொடங்கி சமையலறையை அலங்கரிப்பதைக் காண, மாஸ்டர்செஃப் இந்தியா தமிழில் ஒரு மகா சமையல் போட்டிக்குத் தயாராகுங்கள்!

சமையல் கலைஞர் சஷி, 1 இஞ்ச் கியூப் பிளைன்ட் டேஸ்ட் டெஸ்ட்டை அறிமுகப்படுத்தி, இல்லத்தின் சமையல்காரர்களின் திறன்கள் மற்றும் உணர்வுகளின் வரம்புகளை விஸ்தரிக்கிறார். ஐந்து தைரியமான போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் இறங்குவதால், கடைசி இருவர் மட்டுமே சமையல்கலை மேஸ்ட்ரோவை எதிர்கொள்ளும் அந்த லட்சிய வாய்ப்பைப் பெறுவார்கள்!

சுவைகள் மற்றும் நுணுக்கங்களின் பரபரப்பான போரில், கடைசியாக நிற்கும் இரண்டு இல்ல சமையல்காரர்கள், வழங்கப்பட்ட சரக்கு அறையில் உள்ள பொருட்களை ஆயுதமாய்க் கொண்டு செஃப் சாஷியுடன் நேருக்கு நேர் நின்று மோதுவார்கள். மேலும் பெறுவதற்கு என்ன இருக்கிறது? பெரிதும் விரும்பப்படும் இம்யூனிட்டி பின் தவிர வேறென்ன? ஆனால் இங்கே ஒரு திருப்பம்: சமையல்காரர் சஷி தனது தலைசிறந்த சமையல் கலை படைப்பை வழங்க இல்லத்தின் சமையல்காரர்களை விட குறிப்பிடத்தக்க அளவாக 15 நிமிடங்கள் குறைவான நேரமே கொண்டிருப்பார். நீதிபதிகள் பின்பு யாருடைய உணவை அவர்கள் ருசிக்கிறார்கள் என்பதை அறியாமல், மூன்று உணவுகளையும் ருசித்து, சவாலுக்கு கூடுதல் உற்சாகத்தையும் விறுவிறுப்பையும் அளிக்கிறார்கள்!

மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1 மணிக்கு சோனி LIV-இல் கண்டுகளிக்கவும்.

இது சமையல் கலை ஜாம்பவான்களின் மோதல். இங்கு மிகச்சிறந்த உணவுவகைகள் மட்டுமே வெற்றி பீடத்தை அடைந்து அதன் படைப்பாளிக்கு விலைமதிப்பற்ற இம்யூனிட்டி பின்னைப் பெற்றுத் தரும். நிகழ்வில் சிறப்பாகத் திறனை வெளிப்படுத்தி யார் வெற்றி பெறுவார்கள்? இதயத் துடிப்பை அதிகரிக்கும் இச்செயல்பாட்டைத் தவறவிடாதீர்கள் – இந்த விறுவிறுப்பான மோதலைக் காணவும், இறுதி வெற்றியாளரைக் கண்டறியவும் மாஸ்டர்செஃப் இந்தியா தமிழில் இணைந்திருங்கள்!

Latest articles

திரைத்துறை ஊழியர்களை ஊக்கப்படுத்த ‘பி.டி.ஜி யூனிவர்சல்’ நிறுவனம் முன்னெடுத்த விழா; இயக்குநர்கள் ஆர் கே செல்வமணி, ஆர் வி உதயகுமார் பங்கேற்பு! 

'டிமாண்டி காலனி 2', 'சென்னை சிட்டி கேங்கஸ்டர்ஸ்', 'ரெட்ட தல' ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ள பிரபல திரைப்பட தயாரிப்பு...

இயக்குநர் ராம் கோபால் வர்மா, நவீன் கல்யாணின் ’அனிமல் ஆராத்யா’ ஃபோட்டோ சீரிஸை வெளியிட்டார்!

பிரபல புகைப்படக் கலைஞர் நவீன் கல்யாண் ‘சாரி கேர்ள்’ ஆராத்யாவை வைத்து ’அனிமல் ஆராத்யா’ என்ற புரட்சிகரமான ஃபோட்டோ...

‘9 AM to 9 PM வாலன்டைஸ் டே’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு நிகழ்வில், படத்திற்கு இலவச டிக்கெட் வழங்கப்போகும் இயக்குநரை பாராட்டிய கே ராஜன்!

'9 AM to 9 PM வாலன்டைன்ஸ் டே' படத்தின் பாடல்களை வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் வெளியிட்டு...

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் தொடக்கவிழா பூஜையுடன் நடந்தது!

அசோக் செல்வன் கதைநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்திற்கு #AS23 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது....

More like this