Sunday, January 19, 2025
spot_img
HomeCinemaஜெயிலரில் சூப்பர் ஸ்டாருக்கு மருமகளாக நடித்த மிர்னாவுக்கு 'பெர்த்மார்க்' படத்தில் கர்ப்பிணியாய் கனமான வேடம்!

ஜெயிலரில் சூப்பர் ஸ்டாருக்கு மருமகளாக நடித்த மிர்னாவுக்கு ‘பெர்த்மார்க்’ படத்தில் கர்ப்பிணியாய் கனமான வேடம்!

Published on

ஷபீர் கல்லாரக்கல், மிர்னா, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி.ஆர்.வரலஷ்மி ஆகியோரின் நடிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கியிருக்கும் படம் ‘பெர்த் மார்க்.’

இந்த படம் ஜெனி என்ற மிர்னா கதாபாத்திரத்தைச் சுற்றி நகரக்கூடிய கதை. படத்தில் ஏழு மாத கர்ப்பிணியாக மிர்னா நடித்துள்ளார். படப்பிடிப்பு 36 நாட்கள் நடந்துள்ளது.

படம் குறித்தும் ஜெனி கதாபாத்திரம் குறித்தும் இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் பேசியபோது, “ஜெனி என்ற கதாபாத்திரத்திற்கு நன்றாகத் தெரிந்த, திறமையாக நடிக்கக்கூடிய ஒரு நடிகையைத் தான் தேடிக் கொண்டிருந்தோம். அதில் மிகச் சரியாக மிர்னா பொருந்தினார். கடுமையாக உழைக்கக்கூடியவர் அவர். என்ன சீன் எடுக்கப் போகிறோம், என்னக் காட்சி எடுக்கப் போகிறோம் என்பது குறித்து அவர் எப்போதும் தெளிவாக இருப்பார். படப்பிடிப்பு என்றால் கதைக்கான மூடுக்கு உடனே வந்துவிடுவார். ஜெனிக்கு அவரைத் தவிர வேறு யாரும் பொருந்தியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். மலையாளத்தில் ‘பிக் பிரதர்’, தமிழில் ‘புர்கா’, ‘ஜெயிலர்’ தெலுங்கில் ‘நா சாமி ரங்கா’, ‘உக்ரம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நான் மேலே குறிப்பிட்ட இந்தப் படங்களில் பார்க்காத மிர்னாவை நிச்சயம் ‘பெர்த் மார்க்’ படத்தில் பார்க்கலாம். இயக்குநர், ஹீரோ என நாங்கள் எல்லோரும் எந்த அளவிற்கு உழைப்பைக் கொடுத்துள்ளோமோ அந்த அளவிற்கு மிர்னாவும் கொடுத்துள்ளார். ஏழு மாதம், ஒன்பது மாத கர்ப்பம் என்பதால் கனமான புரோஸ்தெடிக் செய்து கொடுத்தோம். அதை எல்லாம் தாங்கிக் கொண்டு, சிறப்பாக நடித்தார். அவருடைய நடிப்பு இந்த படத்தில் மேலும் மெருகேறி இருக்கும். மக்களுக்கு நிச்சயம் அவரது நடிப்பு பிடிக்கும்” என்றார்.

படக்குழு:
இயக்குநர்: விக்ரம் ஸ்ரீதரன்
எழுத்து, தயாரிப்பு: ஸ்ரீராம் சிவராமன், விக்ரம் ஸ்ரீதரன்
இசையமைப்பாளர்: விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவாளர்: உதய் தங்கவேல்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராமு தங்கராஜ்
படத்தொகுப்பு: இனியவன் பாண்டியன்
ஆடை வடிவமைப்பாளர்: ஸ்ருதி கண்ணத்
கூடுதல் திரைக்கதை எழுத்தாளர்: அனுசுயா வாசுதேவன்
ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமாஸ்
ஒலிக்கலவை: அரவிந்த் மேனன்
கலரிஸ்ட்/ டிஐ: பிரதீக் மகேஷ்,
விஷூவல் எஃபெக்ட்ஸ்: ஃபிக்ஸ் இட் இன் போஸ்ட் ஸ்டுடியோ
தயாரிப்பு நிர்வாகி: ரவிக்குமார்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: ஸ்ரீராம் சிவராமன்
லைன் புரொட்யூசர்: கார்த்தி வேல்
புரொஸ்தெடிக்ஸ்: வினீஷ் விஜயன்
விளம்பர வடிவமைப்பாளர்: கௌதம் ஜே
உதவி இயக்குநர்கள்: டோனி மார்ஷல், சூர்யா விஜயகுமார்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்

Latest articles

‘திருக்குறள்’ திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டார் முதல்வர் மு க ஸ்டாலின்!

‘காமராஜ்’, ‘WELCOME BACK GANDHI’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தமிழரின் பெருமைமிகு அடையாளம் திருக்குறளை திரைப்படமாகத்...

வசூல்ராஜாவான மதகஜராஜா’வை ரிலீஸ் செய்ய உதவியவர்களுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்! -இயக்குநர், தயாரிப்பாளர் கே.ஆர் அறிக்கை

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை: சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர் சி...

15 வருடங்களாக தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அது சிவன் அருளால் இந்த படம் மூலம் நிறைவேறியது பெருமையாக இருக்கிறது! -கண்ணப்பா படத்தின் பிரஸ் மீட்டில் நடிகர் விஷ்ணு மஞ்சு...

பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியமான ‘கண்ணப்பா' திரைப்படத்தில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு...

சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க, 'விலங்கு' இணைய தொடரை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி...

More like this