Wednesday, January 14, 2026
spot_img
HomeCinemaமலையாள நடிகர் ஷேன் நிகாம் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் ‘மெட்ராஸ்காரன்.' படப்பிடிப்புக்கு தயாராகும் படக்குழு.

மலையாள நடிகர் ஷேன் நிகாம் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் ‘மெட்ராஸ்காரன்.’ படப்பிடிப்புக்கு தயாராகும் படக்குழு.

Published on

மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன் இணைந்து நடிக்கும் புதுமையான திரில்லர் திரைப்படம் ‘மெட்ராஸ்காரன்.’

‘ரங்கோலி’ படம் மூலம் பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய இயக்குநர் வாலி மோகன்தாஸ், ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே மையக்கருவாக வைத்து. ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை பரபரப்பான திரைக்கதையாக படைத்துள்ளார்.

மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படங்களில் நடித்துள்ள ஷேன் நிகம், இந்த படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார்.

படத்தை எஸ்.ஆர். புரொடக்சன்ஸ்’ பி.ஜகதீஸ் பெரும் பொருட்செலவில், உயர்தர தொழில் நுட்ப கலைஞர்களுடன் தரமானதொரு படைப்பாக தயாரிக்கிறார்.

படத்தின் நாயகி, மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்.

தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி மாதம், இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

Latest articles

திகிலான பொழுதுபோக்குடன் 2026-ம் ஆண்டை துவங்கிய ZEE5… ஜீவா, ஆண்ட்ரியா பங்களிப்ப்பில் பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பம்!

ZEE5 தமிழ், 2026-ம் ஆண்டை மிகச் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. அதிரடியான திகில் நிறைந்த திரில்லர்கள் மற்றும் அதிரடி...

பயர் கார்த்திக் இயக்கத்தில் சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக உருவான ‘M G 24’ பிப்ரவரி 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

அறிமுக இயக்குநர் பயர் கார்த்திக் இயக்கியுள்ள 'M G 24' படத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமான பிரணவ்...

பைசன் திரைப்படத்திற்கு Letterboxd தளம் மூலம் சர்வதேச அங்கீகாரம்!

சர்வதேச திரைப்பட விமர்சன தளம் Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில் பைசன் திரைப்படம் டாப் 10 ஆக்சன்...

More like this

error: Content is protected !!