Thursday, July 18, 2024
spot_img
HomeCinemaபடத்தில் மொட்டை மாடியில் இருந்து அருண் விஜய் குதிக்கும் காட்சி சிஜி கிடையாது; அவரே நிஜமாக...

படத்தில் மொட்டை மாடியில் இருந்து அருண் விஜய் குதிக்கும் காட்சி சிஜி கிடையாது; அவரே நிஜமாக குதித்தார்! –‘மிஷன் சாப்டர் 1′ பட வெற்றிக்கு காரணமானவர்களுக்கு நன்றி தெரிவித்த நிகழ்வில் இயக்குநர் விஜய் தகவல்

Published on

அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடிக்க, விஜய் இயக்கிய ‘மிஷன் சாப்டர் 1′ படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில் படத்தை வெற்றியடையச் செய்த ரசிகர்களுக்கும், விமர்சனங்களில் பாராட்டி ஊக்குவித்த பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இயக்குநர் விஜய் பேசியபோது, ‘‘எங்கள் எல்லோருக்கும் சிறப்பான வருடம் இது. படம் வெளியாகும்போது எங்களுக்குத் திரையரங்குகள் குறைவாகவே கிடைத்தது. இரண்டு பெரிய படங்கள் வருகிறது எனும்போது எங்களுக்கு அப்படி அமைந்து விட்டது. படத்திற்கான ரெஸ்பான்ஸ் பார்த்துவிட்டு தானாகவே ஸ்கிரீன் அதிகப்படுத்தினார்கள். இன்றைய தேதியில் நிறைய திரையரங்குகளில் நிறைய ஸ்கிரீன்கள் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் மீது அந்த நம்பிக்கையை கொடுத்த மீடியா விமர்சனங்களுக்கு நன்றி.

என்னுடைய வழக்கமான ஸ்டைலில் இருந்து வேறொரு ஜானரில் நான் செய்திருக்கும் படம் இது. பட்ஜெட் பெரிதாகத் தேவைப்படுகிறது எனச் சொன்னபோது, அதற்கு முழு ஆதரவுக் கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ‘அச்சம் என்பது இல்லையே’ என இருந்த படத்தின் டைட்டிலை ‘மிஷன்’ என மாற்றி அனைத்து மொழிகளுக்கும் எடுத்துச் சென்ற லைகா நிறுவனத்தினருக்கும் நன்றி.

படப்பிடிப்பில் செட் பலமுறை விழுந்து, மீண்டும் அதை உருவாக்கினோம். இப்படி படப்பிடிப்பில் இருந்து ரிலீஸ் வரை பல சிக்கல்கள் எங்களுக்கு இருந்தது. அதற்கெல்லாம் நிச்சயம் பலன் கிடைக்கும் என நம்புகிறோம். படத்திற்கு பாசிட்டிவான ஆதரவு கொடுத்து எடுத்துச் செல்லும் அனைவருக்கும் நன்றி.

ஜிவி பிரகாஷின் இசை படத்திற்குப் பெரிய பலம். அருண் விஜய் சார், இயல், அபிஹாசன், ஏமி, நிமிஷா, பரத், சரவணன், ராமலிங்கம் மேஸ்திரி என அனைவருக்கும் நன்றி. படம் இன்று இவ்வளவு பெரிதாகத் தெரிய இவர்கள் தான் காரணம்.

படத்தில் முக்கியமான விஷயம் கதைதான். அதைக் கொடுத்த மகாதேவன் சாருக்கு நன்றி. படத்தில் மொட்டை மாடியில் இருந்து அருண் விஜய் சார் குதிக்கும் காட்சி ஒன்று வரும். அது சிஜி கிடையாது. டூப் போடாமல் அவரே செய்தார்” என்றார்.

நடிகர் அருண் விஜய் பேசியபோது, ‘‘நல்ல கதையுள்ள படங்களை மக்களும் மீடியாவும் எப்போதும் கைவிட்டதே இல்லை. அதற்காக நன்றி சொல்லும் சந்திப்புதான் இது. ஒவ்வொரு படத்திலும் எனக்கு எதாவது ஒரு பிரச்சினை இருக்கும். இந்தப் படத்திலும் உடல் ரீதியாக நிறைய சவால்கள் இருந்தது.

படம் வெளியானபின் புதுச்சேரி, மதுரை என நாங்கள் போன இடங்களில் எல்லாம் குடும்பத்தோடு பார்வையாளர்கள் படத்தைக் கொண்டாடினார்கள். வரும் வாரத்தில் இன்னும் அதிக ஸ்கிரீன் தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

இயக்குநர் இப்படி ஒரு அழகான கதையில் என் பலத்தை சரியாக உபயோகப்படுத்தியுள்ளார். நீங்கள் தரும் ஆதரவுதான் என்னை புதுப்புது கதைகள் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்கிறது. இனியும் அப்படித்தான் நடிப்பேன். தமிழ்நாடு முழுவதும் இந்தப் படத்திற்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவிற்கு நன்றி. வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ்” என்றார்.

படத்தில் வில்லனாக நடித்துள்ள பரத் போபண்ணா பேசியபோது, ‘‘தமிழ் சினிமாவில் என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. என்னுடைய தமிழ் சினிமா பயணத்தை அருண் விஜய் சாருடன் ஆரம்பித்திருக்கிறேன். எங்கள் படக்குழுவினர் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சியை பார்க்க முடிகிறது. அதற்கு காரணமாக இருக்கும் ரசிகர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது” என்றார்.

நடிகர் அபிஹாசன் பேசியபோது, ‘‘படத்தில் சிங் கதாபாத்திரத்தில் நான்தான் நடித்திருக்கிறேன். நான் எதிர்பார்த்ததை விட நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய மீடியாவுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. இந்த படத்தின் வெற்றி எங்கள் எல்லாருக்கும் மறக்க முடியாத பொங்கலாக மாறியிருக்கிறது” என்றார்.

நிகழ்வில் குழந்தை நட்சத்திரம் இயல், நடிகர் ருத்ரா, நடிகர் ‘ராட்சசன்’ சரவணன், ஒளிப்பதிவாளர் சந்தீப், கலை இயக்குநர் சரவணன், காஸ்ட்யூம் டிசைனர் ருச்சி, படத்தின் தயாரிப்பாளர்கள் வம்சி, ராஜசேகர் உள்ளிட்டோரும் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசினார்கள்.

Latest articles

சூரி நடிப்பில் வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பார்ட் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சூரி, விஜய் சேதுபதி நடிக்க, வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை பார்ட் 1’ திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதில்...

Health Minister Ma. Subramanian Inaugurates SPROUT, Saveetha Medical College Hospital’s New Fertility Centre

Thiru K. Selvaperunthagai, President of Tamilnadu Congress Committee member of Legislative Assembly, Sriperumbudur constituency...

நலத்திட்ட உதவிகளோடு நடிகர் விஷ்ணு விஷால் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள் !!

இன்று (ஜூலை 17) நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்த நாள். அதைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுக்க அவரது...

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் தீபாவளியன்று ரிலீஸாகிறது!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன்' வரும் அக்டோபர் 31; 2024 தீபாவளியன்று உலகமெங்கும் வெளியாகிறது. படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்திய...

More like this

சூரி நடிப்பில் வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பார்ட் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சூரி, விஜய் சேதுபதி நடிக்க, வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை பார்ட் 1’ திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதில்...

Health Minister Ma. Subramanian Inaugurates SPROUT, Saveetha Medical College Hospital’s New Fertility Centre

Thiru K. Selvaperunthagai, President of Tamilnadu Congress Committee member of Legislative Assembly, Sriperumbudur constituency...

நலத்திட்ட உதவிகளோடு நடிகர் விஷ்ணு விஷால் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள் !!

இன்று (ஜூலை 17) நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்த நாள். அதைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுக்க அவரது...