Monday, March 16, 2026
spot_img
HomeCinemaவேறு மாதிரியான ஆக்‌ஷனை இந்த படத்தில் முயற்சி செய்திருக்கிறோம்! -‘மிஷன் சாப்டர் 1' ப்ரீ ரிலீஸ்...

வேறு மாதிரியான ஆக்‌ஷனை இந்த படத்தில் முயற்சி செய்திருக்கிறோம்! -‘மிஷன் சாப்டர் 1′ ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் நடிகர் அருண் விஜய் பேச்சு

Published on

அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா நடிக்க, விஜய் இயக்க, லைகா நிறுவனம் தயாரித்து வரும் ஜனவரி 12-ம் தேதி வெளியாகவுள்ள ‘மிஷன் சாப்டர் 1′ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடந்தது.

நடிகர் அருண் விஜய், ‘‘பண்டிகைக்கு வரும் என்னுடைய முதல் படம் ‘மிஷன் சாப்டர் 1’ என்பதால் இது எனக்கு இன்னும் ஸ்பெஷல். விஜய் சார் சொன்னது போல இந்தப் படப்பிடிப்பின் போது மழை, செட் சேதமானது என நிறைய சவால்களை சந்தித்தோம். லண்டன் சிறையை போல இங்கு நாலரை ஏக்கரில் பிரம்மாண்ட செட் அற்புதமாக உருவாக்கினார்கள். வேறு மாதிரியான ஒரு ஆக்‌ஷனை இதில் முயற்சி செய்திருக்கிறோம். என்னை வேறு மாதிரி பார்ப்பீர்கள். டிரெய்லரில் பார்க்காத பல எமோஷன் படத்தில் இருக்கிறது” என்றார்.

இயக்குநர் விஜய், ‘‘மிஷன் படம் எனக்கு ரொம்பவும் முக்கியமானது. நான்கு மொழிகளில் வெளியிட வேண்டும் என்று சொல்லி ‘அச்சம் என்பது இல்லையே’ என்பதை ‘மிஷன் சாப்டர் 1’ என்று மாற்றப்பட்டது. அருண் விஜய் கரியரில் பெரிய பட்ஜெட்டில் உருவான படம் இது. ஏமி ஜாக்ஸனுக்கு கோவிட் என்பதால் வர முடியவில்லை. சரிதா, ஷோபா போல நிமிஷாவும் முக்கியமான நடிகை. ‘மிஷன் சாப்டர்1’ படம் ஷூட்டிங்காக லண்டன் சென்றபோது அங்கு குயின் இறந்துவிட்டார். அதனால், அதிகம் ஷூட் செய்ய முடியவில்லை. பின்புதான் சென்னையில் செட் போட்டோம். பல பிரச்சினைகள் தாண்டிதான் இந்தப் படம் உருவானது,

பொங்கலுக்கு என் படம் வருவது இதுவே முதல் முறை. ‘கேப்டன் மில்லர்’, ‘அயலான்’, ‘மெரி கிறிஸ்துமஸ்’ என பொங்கலுக்கு வரும் எல்லா படங்களும் வெற்றி பெற வேண்டும்” என்றார்.

நடிகர் நாசர், ‘‘நான் மதிக்கிற சில இயக்குநர்களில் விஜயும் ஒருவர். இவருடைய படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதனால் அவர் மீது தனி மரியாதை உண்டு. ஏமி ஜாக்சன் இந்தப் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளை அற்புதமாக செய்துள்ளார். லண்டன் ஜெயில் செட் அற்புதமாக செய்திருந்தார்கள். உங்களைப் போலவே நானும் படத்திற்காக காத்திருக்கிறேன். ஆக்‌ஷன் என்பதையும் தாண்டி படத்தில் அழகான எமோஷன் உள்ளது. தியேட்டரில் படம் பாருங்கள்” என்றார்.

காணொலி மூலம் பேசிய நடிகை ஏமி ஜாக்சன், ‘‘இந்த வாய்ப்புக் கொடுத்த லைகா புரொடக்சன்ஸ், இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. அருண் விஜய் சாருடன் ஆக்‌ஷன் காட்சிகள் செய்தது மகிழ்ச்சி. கோவையில் நடக்கும் பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களை சீக்கிரம் சந்திக்கிறேன்” என்றார்.

Latest articles

ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியிட்டு நிகழ்வை மலேசியாவில் பிரமாண்டமாக நடத்திய டத்தோ அப்துல் மாலிக்கின் மனித நேயத்தை பாராட்டி தேசம் ஐக்கான் விருது வழங்கி கெளரவிப்பு!

மலேஷியாவின் திரைப்படத் தயாரிப்பாளரும், திரைப்பட வினியோகஸ்தரும்,தொழில் அதிபருமான டத்தோ அப்துல் மாலிக் புகழ் பெற்று விளங்கி வருகிறார். தமிழ்...

செல்வராகவன் நடித்துள்ள மனிதன் தெய்வமாகலாம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்!

செல்வராகவன் நடித்துள்ள புதிய திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில்,...

மேட் இன் கொரியா சினிமா விமர்சனம்

எளிமையான குடும்பத்துப் பெண் செண்பகத்துக்கு சிறுவயதிலிருந்தே கொரியாவுக்கு போகவேண்டும் என்பது ஆசை. அந்த ஆசை, அவர் ஒருவரை காதலிக்கும்...

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தமிழ்க்குமரன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்பில் உற்சாகமாக நடந்த ரூம் பாய் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! 

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள 'ரூம் பாய்'...

More like this

ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியிட்டு நிகழ்வை மலேசியாவில் பிரமாண்டமாக நடத்திய டத்தோ அப்துல் மாலிக்கின் மனித நேயத்தை பாராட்டி தேசம் ஐக்கான் விருது வழங்கி கெளரவிப்பு!

மலேஷியாவின் திரைப்படத் தயாரிப்பாளரும், திரைப்பட வினியோகஸ்தரும்,தொழில் அதிபருமான டத்தோ அப்துல் மாலிக் புகழ் பெற்று விளங்கி வருகிறார். தமிழ்...

செல்வராகவன் நடித்துள்ள மனிதன் தெய்வமாகலாம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்!

செல்வராகவன் நடித்துள்ள புதிய திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில்,...

மேட் இன் கொரியா சினிமா விமர்சனம்

எளிமையான குடும்பத்துப் பெண் செண்பகத்துக்கு சிறுவயதிலிருந்தே கொரியாவுக்கு போகவேண்டும் என்பது ஆசை. அந்த ஆசை, அவர் ஒருவரை காதலிக்கும்...
error: Content is protected !!