Wednesday, June 19, 2024
spot_img
HomeCinemaஇந்த படம் நிச்சயம் உங்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும்! -‘மிஷன் சாப்டர் 1'...

இந்த படம் நிச்சயம் உங்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும்! -‘மிஷன் சாப்டர் 1′ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் விஜய் பேச்சு

Published on

அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மிஷன் சாப்டர் 1.’

இந்த படம் பொங்கல் பண்டிகை வெளியீடாக ஜனவரி 12 அன்று திரையரங்குகளுக்கு வரவிருக்கிறது. முன்னதாக கடந்த ஜனவரி 5-ம் தேதி டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் விஜய், ‘‘பல படங்கள் இயக்கியிருக்கிறேன். ஆனால், இது புது அனுபவமாக இருந்தது. அருண் விஜய் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார். திறமையான நடிகைகள் பட்டியலில் நிச்சயம் நிமிஷாவும் இடம்பிடிப்பார். ஏமி, இயல் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இயல் கதாபாத்திரம் தான் படத்தின் ஆன்மா.

இப்போது சினிமா தியேட்டருக்கான படங்கள், டிஜிட்டல் சினிமா எனப் பிரிந்துள்ளது. நிச்சயம் ‘மிஷன் சாப்டர்1′ உங்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும்.

கேப்டன் மில்லர்’, ‘அயலான்’ என இரண்டு அசுரத்தனமான படங்களோடு நாங்களும் வருகிறோம். எல்லாப் படங்களுமே சேர்ந்து ஜெயிக்க வேண்டும்” என்றார்.

நடிகர் அருண்விஜய், ‘‘பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்னுடைய முதல் படம் இது என்பதால் ரொம்ப சந்தோஷம். நாம் என்னதான் உழைப்பைக் கொடுத்திருந்தாலும் படம் சரியான தேதியில் வெளியாவது என்பது முக்கியமான விஷயம்.

நான் இதுவரை நடித்த படங்களிலேயே இந்த படம்தான் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படம். ஆக்‌ஷன், எமோஷன் என எல்லாமே இதில் சரியாக வந்திருக்கிறது. சிறந்த திரையரங்க அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும். ஏமி ஜாக்சன், நிமிஷா எனப் பலரும் நன்றாக நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷின் இசை இந்தப் படத்திற்குப் பெரிய பலம். லண்டன், சென்னை ஆகிய இடங்களில் இதை படமாக்கினோம்.

நாலரை ஏக்கரில் மிகப்பெரிய ஜெயில் செட்டை இங்கு உருவாக்கினோம். சில இயற்கை சீற்றங்களால் அது சேதமானது. அப்போது கூட செலவைப் பற்றி பொருட்படுத்தாது லைகா புரொடக்‌ஷனஸ் முழு ஆதரவு கொடுத்தார்கள். தொழில்நுட்பக்குழுவும் படத்திற்குப் பெரிய பலம்.

பொங்கலன்று உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். எங்களுடன் வெளியாகும் அனைத்துப் படங்களும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்றார்.

இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மஹாதேவன், “எனக்கு எமோஷனுடன் ஆக்ஷன் கதை எழுதுவது பிடிக்கும். இது ஒரு நல்ல கதை. என்ன நினைத்து எழுதினேனோ அது அப்படியே விஜய் படமாக எடுத்துள்ளார். அதற்கும் எனக்குக் கொடுத்த வாய்ப்புக்கும் நன்றி. முதல் முறையாக தமிழில் நான் வேலை பார்க்கிறேன். இதற்கு முன்பு தெலுங்கில்தான் வேலை பார்த்திருக்கிறேன். நான் முதல் முறை தமிழில் எழுதியுள்ள இந்த ஆக்ஷன் கதையில் அருண் விஜய் சார் நடித்திருக்கிறார். அது மிகவும் சந்தோஷம்” என்றார்.

குழந்தை நட்சத்திரம் இயல் அர்ஜுன், “இந்தப் படத்தில் அருண் விஜய் அங்கிள் மகளாக நடித்துள்ளேன். இயக்குநர் விஜய் அங்கிள் அவருடைய பொண்ணு போல என்னைப் பார்த்துக் கொண்டார். ஏமி ஜாக்சன் ஆண்ட்டி அழகாக இருந்தாங்க” என்றார் மழலைக் குரலில்.

விநியோகஸ்தகரும் தயாரிப்பாளரான, ஸ்ரீகோகுலம் மூவிஸ் கோகுலம் கோபாலன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ஆடை வடிவமைப்பாளர் ருச்சி, புரொடக்‌ஷன் மேனேஜர் சரவணன், படத்தொகுப்பாளர் ஆண்டனி, ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, வைட் ஆங்கிள் மீடியா அனிஷ்தேவ், நடிகர் பரத் கோபன்னா, நடிகர் ராட்சசன் சரவணன், நடிகர் விராஜ், நடிகர் அபிஹாசன், பாடகி உத்ரா உன்னி கிருஷ்ணன் உள்ளிட்டோரும் படத்தின் தங்களின் பங்களிப்பு அனுபவம் பற்றி பேசினார்கள்.

Latest articles

The Veterans Premier League Season 3 Celebrates Experience and Passion of Seasoned Cricketers!

We are delighted to announce the launch of The Veterans Premier League (VPL) Season...

அனிருத் வல்லப் தயாரிப்பில் ஃபேன்டசி டிராமாவாக உருவாகும் ‘ராக்கெட் டிரைவர்’ ஆகஸ்டில் ரிலீஸ்!

விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, 'ஸ்டோரீஸ் பை தி ஷோர்' அனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய படம் 'ராக்கெட்...

நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா நடிக்கும் ‘பருவு’ சீரிஸின் முதல் எபிசோடு ZEE5 தளத்தில் இலவசம்! 

சாதிப்பாகுபாடு, கவுரவக் கொலை... நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ZEE5 'பருவு' சீரிஸில் பரபரப்பான திருப்பங்கள்! நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா,...

பிரபாஸ் ரசிகர்களை உற்சாகமாக்கிய ‘கல்கி 2898 கி.பி’ படத்திலின் ‘பைரவா ஆன்தம்.’

பெரும் காத்திருப்பிற்கு பிறகு 'கல்கி 2898 கி.பி' படத்திலிருந்து 'பைரவா ஆன்தம்' பாடலை வெளியாகியுள்ளது. உலகளாவிய பிரபலங்களாக திகழும்...

More like this

The Veterans Premier League Season 3 Celebrates Experience and Passion of Seasoned Cricketers!

We are delighted to announce the launch of The Veterans Premier League (VPL) Season...

அனிருத் வல்லப் தயாரிப்பில் ஃபேன்டசி டிராமாவாக உருவாகும் ‘ராக்கெட் டிரைவர்’ ஆகஸ்டில் ரிலீஸ்!

விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, 'ஸ்டோரீஸ் பை தி ஷோர்' அனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய படம் 'ராக்கெட்...

நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா நடிக்கும் ‘பருவு’ சீரிஸின் முதல் எபிசோடு ZEE5 தளத்தில் இலவசம்! 

சாதிப்பாகுபாடு, கவுரவக் கொலை... நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ZEE5 'பருவு' சீரிஸில் பரபரப்பான திருப்பங்கள்! நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா,...