HomeGeneral‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்தார் முரளி ஷர்மா... பிறந்தநாளில் வெளியான அறிவிப்பு.

‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்தார் முரளி ஷர்மா… பிறந்தநாளில் வெளியான அறிவிப்பு.

Published on

இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் முரளி ஷர்மா, விரைவில் வெளியாகவுள்ள பான்-இந்தியன் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் நடிக்கிறார். நடிகர் முரளி ஷர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தில் அவர் இணைந்திருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தில் ஜெயசூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ரதீஷ் வேகா எழுதி இயக்குகிறார்.
பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் முரளி ஷர்மா, இந்திய சினிமாவின் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். அழுத்தமான உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் முதல் ஆக்‌ஷன் கதாபாத்திரங்கள் வரை, தனது தனித்துவமான நடிப்பால் திரையில் தனக்கென தனியிடத்தை உருவாக்கியுள்ளார். ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் அவர் இணைந்திருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருப்பதுடன் பான்-இந்திய அளவில் படம் மீதான எதிர்பார்ப்பையும் மேலும் வலுப்படுத்தியுள்ளது.
‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் முரளி ஷர்மா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் ஜெயசூர்யாவுடன் ரித்திகா சிங், காவ்யா ஷெட்டி, ஆன்சன் பால், நந்தலால் கிருஷ்ணமூர்த்தி, வினய் ராய், சித்திக், சாய் குமார் மற்றும் சிராஜுதீன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர்.
பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஆபரேஷன் டிரால்’, தேசிய உளவுத்துறை நடவடிக்கைகளைப் பின்னணியாகக் கொண்ட இன்வஸ்டிகேஷன் த்ரில்லர் திரைப்படமாகும். ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலைத் தழுவி உருவாகியுள்ள இப்படம், ஆக்‌ஷன், உளவுத்துறை நடவடிக்கைகள் மற்றும் தேசப்பற்று ஆகியவற்றை பேசுகிறது.
கேரளா, கோயம்புத்தூர், புதுடெல்லி, குலு, மணாலி, முசோரி மற்றும் லடாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் ஜாபி ஜார்ஜ் தாடதில் தயாரிக்கும் இப்படம், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகத் தயாராகி வருகிறது.
இப்படத்தில் ஜெயசூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரதீஷ் வேகா கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். சுனிமோல் ஜாபி இணை தயாரிப்பாளராக உள்ளார்.
ஒளிப்பதிவை நஜோஸ் மேற்கொள்ள, படத்தொகுப்பை ஷஃபீக் வி.பி. கவனிக்கிறார். இசை மற்றும் பின்னணி இசையை ரதீஷ் வேகாவே அமைத்துள்ளார். திட்ட வடிவமைப்பை நோபிள் ஜேக்கப் மேற்கொண்டுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை சஜீஷ் தாமரச்சேரியும், கலை இயக்கத்தை சுனீஷ் சோதரனும் கவனித்துள்ளனர். ஆடை வடிவமைப்பை சமீரா சனீஷ் மற்றும் சரிதா ஜெயசூர்யா மேற்கொண்டுள்ளனர். ரோனெக்ஸ் சேவியர் நடிகர்களின் ஒப்பனையை கவனித்துள்ளார்.
முரளி ஷர்மா தனது பிறந்தநாளை கொண்டாடும் இந்த வேளையில், ‘ஆபரேஷன் டிரால்’ படக்குழு, அவருக்கு தங்களது அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு அவரது சிறப்பான நடிப்பை கொண்டு சேர்க்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

Latest articles

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

More like this

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...