‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘மெரி கிறிஸ்துமஸ்.’
இந்த படம் ஆச்சரியங்கள், திருப்பங்கள் மிகுந்த ஒரு தனித்துவமான சினிமா அனுபவத்தை வழங்கும் படைப்பாக உருவாகியுள்ளது.
பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள இந்த படம் வரும் 12 ஜனவரி 2024 அன்று உலகம் முழுவதும் தமிழ், இந்தி மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் தமிழ் மற்றும் இந்தி பதிப்புகளில் தனித்தனியாக பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். முன்னர் வெளியான படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அத்துடன் திரையுலக பிரபலங்கள் பலரும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ பட போஸ்டரை பாராட்டினர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
‘ஃபார்ஸி’ என்ற இந்தி சீரிஸில் முத்திரை பதிக்கும் வகையில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்த விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தி திரைப்படம் என்பதாலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
‘டிப்ஸ் ஃபிலிம்ஸ்’ மற்றும் ‘மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ்’ திரைப்பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படைப்பைக் கண்டு ரசிக்க, ஆடிப்பாட, சிலிர்க்க ரசிகர்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.