HomeUncategorized‘தங்கலான்' படத்தில் பழங்குடிப்பெண்ணாக கலக்கும் மாளவிகா மோகனன்!

‘தங்கலான்’ படத்தில் பழங்குடிப்பெண்ணாக கலக்கும் மாளவிகா மோகனன்!

Published on

நடிகை மாளவிகா மோகனன் ஒரே விதமான கதாபாத்திரங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், பலவிதமான பாத்திரங்களை ஏற்று, சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

கவர்ச்சியான அவதாரங்களில் நடித்தாலும், உடனே அழுத்தமான பாத்திரத்திற்கு மாறும் அவரது திறன் ஒரு நடிகையாக அவரது பன்முகத்தன்மையை நிரூபிக்கிறது. பல்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளில் தன் திறமையை நிரூபிக்க, அவர் எப்போதும் தயாராக இருக்கிறார்.

சீயான் விக்ரமுடன் அவர் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தில், ஒரு பழங்குடிப் பெண்ணாகவே மாறியிருப்பது அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. அவர் இப்படி மாறுவது இது முதல் முறையல்ல; உலகப் புகழ்பெற்ற இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய அவரது முதல் படமான ‘பியாண்ட் தி க்ளவுட்ஸ்’, படத்திலேயே மிக கனமான கதாபாத்திரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இது அவரது நடிப்புத் திறமைக்குச் சான்று.

தமிழின் மிக முக்கியமான புகழ்மிகு இயக்குநரான பா ரஞ்சித்துடன் இணைந்து பணிபுரிவது, சந்தேகத்திற்கு இடமின்றி அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும். பா ரஞ்சித் உடனான கூட்டணியில், அவரை வித்தியாசமான பாத்திரத்தில் பார்ப்பது ரசிகர்களுக்குச் சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும். “தங்கலான்” படத்தில் தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது அவரது பன்முக திறமைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும்.

மாளவிகா மோகனனின் திறமை அனைத்து தரப்பினரும் பாராட்டும்படி வெளிப்படுகிறது. அவர் நடிப்பில் அடுத்த்டுத்து வரவிருக்கும் படங்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Latest articles

பிரபல இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ‘வாரண்ட்’ சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா!

விலங்கு சீரிஸ், மாமன் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள வாரண்ட்...

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா,  சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.

சென்னைஸ் அமிர்தா கல்லூரியின்  உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார்.   விமான நிலையம் போன்ற நிஜ...

விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளில் வெளியான ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர்!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில்,...

29 சினிமா விமர்சனம்

தன் காதலன் தன்னையே சுற்றிக் கொண்டிருப்பதால் வெறுத்துப் போகும் காதலி பிரேக் அப் முடிவெடுக்கிறாள். வெறுக்கிற அளவுக்கு அவன்...

More like this