Friday, March 28, 2025
spot_img
HomeCinema‘லியோ' பட இயக்குநர் லோகி ஒரு திரைச் சித்தன்! -மன்சூர் அலிகான் பாராட்டு

‘லியோ’ பட இயக்குநர் லோகி ஒரு திரைச் சித்தன்! -மன்சூர் அலிகான் பாராட்டு

Published on

‘லியோ’ பட இயக்குநரைப் பாராட்டி மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கை:-

யாவோரும் இன்புற்றிருக்க நினைப்பது வேயின்றி யாமொன்றறியேன் பராபரமே!.. குண்டு போட்டு மனிதம் கொல்லும் நரமாமிச பட்சிகளின் உலக அரசியல் மன அழுத்தத்தில், நேற்று மீம்ஸ் போன்று நான் போட்ட பதிவு என்னையே அதிர்ச்சியடைய வைத்தது. ‘லியோவில் தம்மாத்தூண்டு’ என்ற சொல் பதம் என்னையே நான் மன்னிக்க முடியாதவனா ஆக்கிவிட்டது! அதற்காக லோகேஷ், அவரது குழுவினர் சக்தி, சந்தோஷ், நிமெட், கௌதம். பாலா, ராம்குமார் ஆகியோர் எவ்வளவு மெனக்கெட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். லோகி ஒரு திரைச் சித்தன். 3000 பேரை வைத்து வேலை வாங்குகையில், இருக்கிற இடம் தெரியாமல் நாமெல்லாம் கைபேசியை வைத்து மகிழ்ச்சிக்கு பயன்படுத்துகையில், அவர் அது போன்ற உபகரணங்களை பாத்திரங்களை படைப்பதற்கு, சதா சிந்தனையுடன் தேனியைப் போன்று செயலாற்றுவது கண்டேன்!

சில பாத்திரப் படைப்புக்கள் நீட்ட குறைத்தலின் போது, நாம் ஒன்றும் செய்ய முடியாது. கேப்டன் பிரபாகரன் 15,000 அடி. ஆனால் எடுக்கப்பட்டது
ஒரு லட்சத்து பதினாயிரம் அடி!

என் வாழ்நாளில் 350’க்கு மேற்பட்ட இயக்குனர்களுடன் நான் பணியாற்றி இருந்தாலும், லோகியைப் போன்று வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் என்று அலட்டிக் கொள்ளாமல் குடும்பம் மறந்து, உடலை வருத்திய படைப்பாளியை பார்த்ததில்லை. நான் தம்பி விஜயுடன் பல படங்களில் மெயின் வில்லனாக தேவா, நாளைய தீர்ப்பு, மாண்புமிகு மாணவன் என அழிச்சாட்டியம் செய்திருந்தாலும், அந்த காலகட்டம் வேறு!

இப்போது குடும்பம் குடும்பமாக, குழு குழுவாக திரையரங்கை திருவிழாவாக மக்களை மகிழ்விக்க பாடுபட வேண்டியிருக்கிறது. தவறாக வசூல் காட்டி வெளியே ஹைனா(Heena)வைப்போல் பலர் குறைக்கின்றனர். நான் யதேச்சையாக பேசுவது ஊடகங்களில் பலமாக பரப்படைகிறது. பிணியில் கிடக்கும் நம் மண்ணை மீட்க இனி தன்னலம் மறந்து அரசியல், திரைப் பணியில் என்னை அர்பணிப்பேன். என்னுடைய சொந்தப்பட படைப்பு காரணமாக லியோவில் என்னை நினைத்தபடி, உடலை வடிவமைத்து அர்பணிக்க முடியவில்லை. அதற்காக நான் வருத்தப்படுகிறேன். இன்றிலிருந்து சுக, தன்னலம் துறந்த மன்சூர் அலிகான் மக்களுக்காக, மண்ணின் பெருமைக்காக!

சக்சஸ் மீட்டில் நவம்பர் ஒன்றாம் தேதி சந்திப்போம்…

நெஞ்சார்ந்த நன்றிகள்!

Latest articles

காமெடி படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு என்பதை மனதில் வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்! -‘கொஞ்சநாள் பொறு தலைவா’ படத்தின் டிரெயலர் வெளியீட்டு விழாவில் ஆருத்ரன் பிக்சர்ஸ் கலியமூர்த்தி பேச்சு

அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், ஆருத்ரன் பிக்சர்ஸ் எஸ் முருகன் தயாரிப்பில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள 'கொஞ்ச...

ராணுவ வீரரின் காதல் கதையில் உருவாகும் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ படத்துக்கு கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை!

அனுராதா அன்பரசுவின் ஏஏஏ பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி.' இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா பின்னணி இசையமைத்தால்...

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலில் கிடைத்த அமோக வரவேற்பு… உற்சாகத்தில் படக்குழு!

  விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்துக்கு அற்புதமான...

More like this