Monday, March 24, 2025
spot_img
HomeCinemaஇறக்க முயற்சிக்கிறவனை இறந்துபோன பெண்ணால் காப்பாற்ற முடியுமா? விறுவிறுப்பும் பரபரப்புமாய் பதில்சொல்ல வருகிறது ஸ்ரீராம் கார்த்திக்...

இறக்க முயற்சிக்கிறவனை இறந்துபோன பெண்ணால் காப்பாற்ற முடியுமா? விறுவிறுப்பும் பரபரப்புமாய் பதில்சொல்ல வருகிறது ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் ‘மெஸென்ஜர்.’

Published on

ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க, பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கும் படம் ‘மெஸன்ஜர்.’

கதாநாயகிகளாக மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார் , ஜீவா ரவி, யமுனா, கோதண்டன், இட்இஸ் பிரசாந்த், கூல் சுரேஷ், ராஜேஷ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

படத்தை ஃபேண்டஸி லவ் ஸ்டோரி பாணியில் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ரமேஷ் இலங்காமணி.

ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஶ்ரீராம் கார்த்திக் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அப்போது அவரது ஃபேஸ்புக் மெஸன்ஜரில் ஒரு பெண் மெசேஜ் செய்து அதை தடுக்கிறாள். அவளுக்கு எப்படி தான் தற்கொலை செய்யப் போவது தெரியும் என அவளிடமே மெசேஜ் செய்து ஶ்ரீராம் கார்த்திக் கேட்க, அதற்கு தான் இறந்து விட்டதாக சொல்கிறார். இறந்த பெண்ணொருவர் தன் உயிரைக் எப்படி காப்பாற்றினார்? அந்த பெண் யார்? இந்த கேள்விகளுக்கு ஶ்ரீராம் கார்த்திக் விடை தேடி செல்வதே படத்தின் கதை.

விக்ரவாண்டி அதன் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

ரிலீஸுக்கு தயாராகியிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. விரைவில் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் கதாநாயகன் கன்னிமாடம், யுத்தகாண்டம் பாத்திரகாட் (மலையாளம்) உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சார் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருக்கிறார்.

இயக்குநர் இலங்காமணி இயக்குநர் ஏ ஆர் காந்தி கிருஷ்ணா, இயக்குநர் பத்ரி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

படக்குழு:-
ஒளிப்பதிவு: பால கணேசன்
படத்தொகுப்பு: பிரசாந்த்
இசை: அபு பக்கர்
பாடல்கள்: தக்ஷன், பிரசாந்த்
பாடியவர்கள்: சைந்தவி, சத்யபிரகாஷ், கபில் கபிலன்
கலை: பாலசுப்ரமணியன்

Latest articles

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...

அரசியல் தலையீடுகளால் மாணவ சமூகம் எப்படியெல்லாம் பாழாகிறது என்பதை இந்த படம் எடுத்துக் காட்டியுள்ளது! -‘அறம் செய்’ படம் பார்த்து பாராட்டிய தொல் திருமாவளவன்

  அறம் செய் என்ற திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொண்டு படத்தை பார்த்த தொல்.திருமாவளவன் தன் கருத்துகளை பகிர்ந்துகொண்டபோது... இயக்குநர் எஸ்...

More like this