Tuesday, June 17, 2025
spot_img
HomeCinemaகப்பல் கேப்டன் சிவபிரகாசம் உதயசூரியன் தயாரிப்பில், நெல்லை மாவட்ட பின்னணியில் திருவிழா கதையாக உருவாகும் 'மாடன்.'

கப்பல் கேப்டன் சிவபிரகாசம் உதயசூரியன் தயாரிப்பில், நெல்லை மாவட்ட பின்னணியில் திருவிழா கதையாக உருவாகும் ‘மாடன்.’

Published on

கப்பலில் கேப்டனாக பணிபுரிந்த சிவபிரகாசம் உதயசூரியன் தயாரிக்கும் படம் ‘மாடன்.’

பல குறும்படங்களை இயக்கியுள்ள இரா. தங்கபாண்டி கதை, திரைக்கதை, வசனம் எழுதி தனது முதல் படமாக இயக்கி வருகிறார்.

இளம் நாயகனாக கோகுல் கௌதம் அறிமுகமாக அவருக்கு ஜோடியாக ஷார்மிஷா நடிக்கிறார். டாக்டர் சூரியநாராயணன், சூப்பர் குட் சுப்ரமணி, ஸ்ரீ பிரியா ஆகியோருடன் திருநங்கை ரஸ்மிதாவும் நடிக்கிறார்.

நெல்லை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் இருக்கும் சுடலைமாடன் கோவிலில் பல வருடங்களாக கோவில் திருவிழா நடை பெறாமல் இருக்கிறது அதை நடத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் கதாநாயகன் களம் இறங்குகிறான். அதனால் பல எதிர்ப்புகளை சந்திக்கிறான். தொடர்ந்து அதிர்ச்சியான சம்பவங்கள் நடைபெறுகிறது. அவனுடைய இந்த முயற்சிக்கு அவனின் காதலியும் துணை நிற்கிறாள். இதனால் இருவருக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்படுகிறது. அந்த தடைகளை தாண்டி அவன் கோவில் திருவிழாவை நடத்தினானா? என்பதே படத்தின் கதை. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அழகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”நெல்லையில், கள்ளமில்லா வெள்ளை உள்ளத்து காதலர்களின் கம்பீர கதையையும் சேர்த்து மதங்களை தாண்டிய மனிதர்களின் உணர்வால் ஊரை ஒன்றிணைத்த வல்லவனான மாடனின் கோவில் திருவிழா கதை. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு எல்லைச்சாமி உண்டு. அதற்கு ஒரு வரலாறும் உள்ளது. அதை மக்களுக்கு பிடித்த மாதிரி திரைக்கதை அமைத்து விறுவிறுப்பாக உருவாக்குகிறேன்” என்றார்.

படக்குழு:-
ஒளிப்பதிவு: சின்ராஜ் ராம்
இசை: விபின்.ஆர்
படத்தொகுப்பு: ரவிசந்திரன் .ஆர்
பாடல்கள்: வே. ராமசாமி, கார்த்திக் கிருஷ்ணன்
வசனம், ஒரு பாடல்: நெய்வேலி பாரதிகுமார்
சண்டைப் பயிற்சி: மாஸ்மோகன்
நடன பயிற்சி: ராக்சங்கர்
தயாரிப்பு நிர்வாகம்: குட்டி கிருஷ்ணன்
மக்கள் தொடர்பு: விஜயமுரளி

Latest articles

பிக்பாக்கெட் படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்து வாழ்த்திய புதுச்சேரி முதலமைச்சர்!

'பிக் பாக்கெட்' என்ற படத்தை, ஓ.டி.டியில் வெளியாகி பிரபலமான ரிவால்வர் படத்தை இயக்கிய ஜெ எஸ் ஜூபேர் அகமத்...

கண்ணப்பா திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்!

தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த்...

தேசிய விருது வென்ற பிரியாமணி, ஆளுமையான நடிகை ரேவதி கூட்டணியின் ‘குட் வைஃப்’ தொடரின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டது!

தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இணைய தொடர் ‘குட்...

More like this

error: Content is protected !!