மனதைக் கவரும் வரிகளுடன், தீப்பிடிக்கும் இசையில் ‘மார்டின்’ படத்திலிருந்து, மார்டின் ஆந்தம் பாடல் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கு அழைத்துச் செல்கிறது.
ஆந்தம் முழுக்க படத்தின் நாயகன் துருவா சர்ஜா பட்டையை கிளப்புகிறார். தன் அதீத கவர்ச்சியால் திரையை தீப்பிடிக்க வைக்கிறார். மார்டினில் அவரது நடிப்பு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அவரது தோற்றமும், மிடுக்கும், சேர்ந்த கலவையில் படத்தை திரையில் காணும் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.
பாடலின் வரிகளை கன்னடத்தில் ஸ்ரீமணி, ஏ பி அர்ஜுன், தமிழில் விவேகா, தெலுங்கில் ஸ்ரீமணி, ஹிந்தியில் ஷபீர் அகமது, மலையாளத்தில் விநாயக ஷஷி குமார் ஆகியோர் எழுதியுள்ளனர்.