பிக்பாஸ் சம்யுக்தா போலீஸ் அதிகாரியாகவும், ஆனந்த்ராஜ் தாதாவாகவும் நடிக்கும் ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.
வடசென்னை கதைக்களத்தில் ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் அதிரடி மாற்றங்களை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சுவாரஸ்யமாக சொல்லும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஏ.எஸ். முகுந்தன் இயக்குகிறார். முனீஸ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ் மற்றும் ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
படக்குழு:-
தயாரிப்பு: ‘அண்ணா புரொடக்ஷன்ஸ்’ வி.சுகந்தி அண்ணாதுரை
கதை: சுகந்தி அண்ணாதுரை
ஒளிப்பதிவு:அஷோக்ராஜ்
இசை: ஸ்ரீகாந்த் தேவா
பாடல்கள்: கு. கார்த்திக்
கலை இயக்குநர்: ராகவா குமார்
படத்தொகுப்பு: தேவராஜ்
நடனம்: தீனா, ராதிகா
தயாரிப்பு மேற்பார்வை: ரகு
மக்கள் தொடர்பு: S 2 Media சதீஷ்குமார்