சயின்ஸ் பிக்சன் கதைகளை மையமாக வைத்து உருவாகும் படைப்புகள் பலவும் வெற்றியடைவதுண்டு. அந்தவகையில் விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு அங்கமான ரோபோவை மையமாக வைத்து உருவாகியுள்ள குறும்படம் ‘மெட்டா பியூட்டி.’
விரைவில் வெளியாகவிருக்கும் இந்த படைப்பு பெண்ணியம் சார்ந்த, பாலியல் வன்புணர்வுக்கு எதிரான விழிப்புணர்வு பைலட் படமாக உருவாகியுள்ளது.
ராஜா எம் முத்தையா இயக்கியுள்ள இந்த படத்தில் ரோபோவாக திவ்யலெட்சுமி நடிக்க, ரோபோவை உருவாக்கும் விஞ்ஞானியாக அர்ச்சனா உன்னிகிருஷ்ணன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விஜயராஜ், இளங்கோ சுரேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் பிரேம்ஜி அமரன், இயக்குநர் தரணிதரன், படத்தொகுப்பாளர் ரூபன், பாடகி சைந்தவி ஆகியோர் வெளியிட்டனர். அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
படக்குழு:-
தயாரிப்பு: தங்கதுரைபாண்டியன்
கதை, இயக்கம், பாடல்: ராஜா எம் முத்தையா
இசை: ஜி கே வி
பாடியவர்: ஶ்ரீநயா நாகேஸ்வர்
ஒளிப்பதிவு: தனசேகர் விஜயகுமார், சிவன்
மக்கள் தொடர்பு: குமரேசன்