HomeCinema'லவ் ஓ லவ்' சினிமா விமர்சனம்

‘லவ் ஓ லவ்’ சினிமா விமர்சனம்

Published on

ஜென் ஸி தலைமுறையைக் கவரும் விதத்தில், அவர்களின் லைஃப்ஸ்டைலை மையப்படுத்திய படம்.

கதாநாயகன் ரகுவரன் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன், நன்றாகப் படித்தவன், பொறுப்பானவன், பெரு நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவன். அவனது காதலி அவந்திகா ஆடம்பர வாழ்க்கையை விரும்புபவர். அந்த வாழ்க்கையை அனுபவிக்க காதலன் ரகுவரனைப் பயன்படுத்துகிறார். அவளுக்கு செலவு செய்ய தன் சம்பளம் போதவில்லை என்ற நிலையில் கடன் வாங்கி கடன் வாங்கி பெரியளவிலான பிரச்சனையில் சிக்குகிறார். அதனால் அவந்திகாவைப் பிரியும் முடிவுக்கு வருகிறார். இது கதையின் ஒரு பாதி.

அவந்திகாவுக்கு அவனைப் பிரிய மனமில்லை. இப்படியான சூழ்நிலையில், ‘நான் உனக்கு செலவு செய்ததைப் போல் எனக்கு நீ செலவு செய்தால் காதலை தொடரலாம்’ என்கிறாள். அதற்கு ஒத்துக் கொள்ளும் அவந்திகா படும்பாடு கதையின் மறு பாதி.

ஈல்லா பிரச்சனைகளையும் கடந்து காதலர்கள் இணைகிறார்கள். எது இணைத்து வைக்கிறது என்பது கிளைமாக்ஸ்.

கடன் வாங்கி காதலியை மகிழ்விப்பது, கடன் தொல்லையால் வேலையை இழப்பது, குடும்பத்தைப் பிரிவது, காதலி இழுத்துவிட்ட பிரச்சனையால் போலீஸில் சிக்குவது, காதலியின்பிரியத்தை உணர்வது என தனது இயல்பான நடிப்பால் கவனிக்கவும் வைக்கிறார்; கலகலப்பூட்டவும் செய்கிறார் ரகுவரனாக வருகிற பவிஷ்.

அவந்திகாவாக நாக துர்கா, லட்சணமாக இருக்கிறார். அதைச் செய் இதைச் செய் என்று சொல்லிச் சொல்லி காதலனை கடன்காரனாக்குவதும், அவனது தேவைகளை நிறைவேற்ற முடியாமல் அவதிப்படுவதுமாக எளிமையான நடிப்பால் கவர்கிறார்.

காவல்துறை உயரதிகாரியாக இயக்குநர் செல்வராகவன், பவிஷின் அப்பாவாக இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், நாகதுர்காவின் அம்மாவாக ரம்யா என திரண்டிருக்கும் நடிகர் நடிகைகளின் பங்களிப்பு கச்சிதம்.

ஃபாக்‌ஷன் (Foxn) இசையில் பாடல்களும் பின்னணி இசையும், பி ஜி முத்தையாவின் ஒளிப்பதிவும் நேர்த்தி.

எதிர்பார்ப்புகளால் உடைகிற காதல் உண்மையான நேசத்தால் இணைகிற கதையை காமெடி கலாட்டாக்களுடன் அரங்கேற்றி ஜாலியான எளிமையான படம் பார்த்த திருப்தி தருகிறார் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன்.

Rating 3 / 5

Latest articles

மகுடம் சினிமா விமர்சனம்

விஷால் இயக்குநராகியிருக்கும் படம். ஏற்ற பாத்திரங்கள் அப்பா மகன் என இரண்டு. அப்பா பெரிய கேங்ஸ்டர். அப்படியிருப்பவருக்கு எதிரிகள்...

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

‘காட்டாளன்’ திரைப்படத்தின் மூலம் மலையாளம் மட்டுமல்லாது, மொழித் தடைகளைத் தாண்டி தென்னிந்திய அளவில் தனது பிராந்திய ஸ்ட்ரீமிங் திட்டத்தை...

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

https://www.youtube.com/watch?v=nHZxWWcUltk குட்வில் எண்டர்டெயின்மென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பான் இந்தியன் இன்வஸ்டிகேட் திரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின்...

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்பு புரோமோவை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது....

More like this