துல்கர் சல்மானின் புதிய படம் ‘லக்கி பாஸ்கர்.’
‘சார்/வாத்தி’ படத்திற்குப் பிறகு வெங்கி அட்லூரி இயக்கும் படம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் 24-ம் தேதி பூஜையுடன் தொடங்கியது.
நிகழ்வில் தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டு படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
‘ஒரு சாதாரண மனிதனின் அளவிட முடியாத உயரங்களை நோக்கிய அசாதாரண பயணம்’ என்ற கருப்பொருளைச் சுற்றி வருவதுதான் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ஒன்லைன். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற எடிட்டர் நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார்.
சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சமீப வருடங்களில் தெலுங்கு சினிமாவில் வித்தியாசமான ஜானர்களில் படங்கள் தயாரித்து வெற்றிக் கொடுத்து வருகிறது. இப்போது அவர்கள் அடுத்து பான் இந்திய மார்க்கெட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளனர். அவர்கள் தயாரிப்பில் உருவாகும் படம் இது.