Friday, April 25, 2025
spot_img
HomeCinemaதயாரிப்பாளர் ‘தம்பிகளா நல்லா பண்ணுங்க' என்று ஊக்கப்படுத்தியதால் படம் நன்றாக வந்துள்ளது! -‘லாக்கர்' படத்தின் டிரெய்லர்...

தயாரிப்பாளர் ‘தம்பிகளா நல்லா பண்ணுங்க’ என்று ஊக்கப்படுத்தியதால் படம் நன்றாக வந்துள்ளது! -‘லாக்கர்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் யுவராஜ் கண்ணன் பேச்சு

Published on

சினிமா மீது காதல் கொண்ட ராஜசேகர், யுவராஜ் கண்ணன் இருவரும் இணைந்து ‘லாக்கர்’ என்கிற படத்தை இயக்கியிருக்கிறார்கள்.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியீடு மற்றும் அறிமுக விழா நவம்பர் 21; 2023 அன்று சென்னையில் நடந்தது.

விழாவில் இயக்குநர்களில் ஒருவரான யுவராஜ் கண்ணன் பேசும்போது, இந்த படத்தில் பணியாற்றிய பலருக்கும் இது முதல் படம் என்பதால் தங்களது சொந்தப் படம்போல நினைத்து பணியாற்றி இருக்கிறார்கள். தயாரிப்பாளர் ‘தம்பிகளா நல்லா பண்ணுங்க’ என்று ஊக்கப்படுத்துவார். எங்கள் மீது நம்பிக்கை வைத்தார். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை என்று நினைக்கிறேன். படம் நன்றாக வந்துள்ளது” என்றார்.

இயக்குநர் ராஜசேகர், நானும் யுவராஜும் 2013ல் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்தபோது அறிமுகமாகி நண்பர்களாக இருக்கிறோம். நான் எந்த கதை சொன்னாலும் பொறுத்துக் கொள்பவர் யுவராஜ். நாங்கள் சில ஆண்டுகளாகக் குறும்படங்கள் எடுத்து திரையுலகில் நுழையப் போராடிக் கொண்டிருந்தோம். இந்த கதையை 20 நாளில் தயார் செய்தோம். நல்ல படமாக வந்துள்ளது” என்றார்.

நாயகன் விக்னேஷ் சண்முகம், நாயகி நிரஞ்னி அசோகன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் படம் பற்றி பகிர்ந்தனர்.

நிகழ்வின் நிறைவாக படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட, உதவி இயக்குநர்கள் பெற்றுக் கொண்டார்கள். படம் முழுக்க உழைக்கும் உதவி இயக்குநர்கள் மீது பாராமுகம் காட்டும் திரையுலகில் இது ஒரு முன்னுதாரணமாக அமைந்தது.

படம் பற்றி…

இரட்டை இயக்குநர்களில் கிருஷ்ணன் – பஞ்சு தமிழ்த் திரையுலகில் பிரபலமானவர்கள். அதன் பிறகு பாரதி – வாசு, ராபர்ட் – ராஜசேகர், மலையாள சித்திக் – லால் உள்ளிட்ட இரட்டை இயக்குநர்கள் ரொம்பவே ஃபேமஸ். அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் இரட்டை இயக்குநர்களாக களம் காண்கிறார்கள்.

ராபரி டிராமாவாக உருவாகியுள்ள லாக்கர் படத்தில் கதாநாயகனாக விக்னேஷ் சண்முகம் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே ‘இறுதிப்பக்கம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். ‘எதற்கும் துணிந்தவன்’, ‘கேம் ஓவர்’ உள்ளிட்ட படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களிலும் மாஸ்டர்’‘ படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருக்கிறார். ‘கள்ளச்சிரிப்பு’ என்ற ஜீ5 ஓடிடி தளத்தின் இணைய தொடரிலும் நடித்துள்ளார்.

கதாநாயகியாக அறிமுக நடிகை நிரஞ்சனி அசோகன் நடித்துள்ளார். இவர் சில பைலட் படங்களிலும் ஆல்பங்களிலும் நடித்திருக்கிறார்.

வில்லனாக நிவாஸ் ஆதித்தன் நடித்துள்ளார். இவர் ‘தரமணி’, ‘ரெஜினா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர். ‘பிரின்ஸ்’, ‘மிரள்’, ‘குட் நைட்’ உள்ளிட்ட படங்களில் நடித்த சுப்ரமணியன் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு தணிகைதாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இவர் தரமணி எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி மாணவர்.களப்பணி அனுபவத்திற்காக ஓம் பிரகாஷ் மற்றும் பல்லு போன்ற ஒளிப்பதிவாளர்களிடம் பணியாற்றியவர். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற சேனல்களுக்கு ஒளிப்பதிவு செய்து கொடுத்துள்ளவர்.நிறைய விளம்பரப் படங்கள், கார்ப்பரேட் வீடியோக்கள் எடுத்துள்ளவர்.இவர் டெல்டா என்கிற இன்னொரு படத்திலும் ஒளிப்பதிவுப் பணி செய்து வருகிறார்.

அறிமுக இசையமைப்பாளர் வைகுந்த் ஸ்ரீநிவாசன் இசையமைத்துள்ளார்.இவர் ஏற்கெனவே நடிகர் தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணன் வேற மாதிரி என்ற பாடல் இசை அமைத்தவர். ஏராளமான இசை ஆல்பங்களுக்கும், மை டியர் எக்ஸ் இணையத் தொடருக்கும் இசையமைத்துள்ளவர்.

படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கார்த்திக் நேத்தா,விஷ்ணு இடவன் என இரு பாடலாசிரியர்கள் எழுதி உள்ளனர்.

படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் கண பார்த்தி.இவர் பென்குயின், குருதி ஆட்டம் போன்ற படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர்.இப்படிப் பல்வேறு திறமையானவர்கள் இணைந்துள்ளனர்.

Latest articles

மனைவிக்கு திருமணநாள் பரிசாக பி எம் டபிள்யூ கார் பரிசளித்த இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர்!

இயக்குநர் எஸ் .ஏ .சந்திரசேகர் தனது காதல் மனைவி ஷோபா சந்திரசேகருக்கு ஒரு பிஎம் டபிள்யூ கார் திருமண...

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் சசிகுமார் - சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ' டூரிஸ்ட் ஃபேமிலி...

வல்லமை சினிமா விமர்சனம்

சமூக அக்கறை படைப்புகளின் வரிசையில் இணைகிற படம். போஸ்டர் ஒட்டுவதை தொழிலாக கொண்ட சரவணனின் (பிரேம்ஜி) பூப்பெய்தும் பருவத்திலிருக்கிற மகள்...

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

More like this

மனைவிக்கு திருமணநாள் பரிசாக பி எம் டபிள்யூ கார் பரிசளித்த இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர்!

இயக்குநர் எஸ் .ஏ .சந்திரசேகர் தனது காதல் மனைவி ஷோபா சந்திரசேகருக்கு ஒரு பிஎம் டபிள்யூ கார் திருமண...

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் சசிகுமார் - சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ' டூரிஸ்ட் ஃபேமிலி...

வல்லமை சினிமா விமர்சனம்

சமூக அக்கறை படைப்புகளின் வரிசையில் இணைகிற படம். போஸ்டர் ஒட்டுவதை தொழிலாக கொண்ட சரவணனின் (பிரேம்ஜி) பூப்பெய்தும் பருவத்திலிருக்கிற மகள்...
error: Content is protected !!