ஜெய், தன்யா ஹோப் நடித்துள்ள வெப் சீரிஸ் ‘லேபில்.’ மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது.
தொடரின் முதல் டிரெய்லர் தொடர் மீதான எதிர்பார்ப்பை தூண்டிய நிலையில் புதுமையான காட்சிகளுடன் வெளியாகியிருக்கிற 2-வது டிரெய்லர் தொடரின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அதையடுத்து இந்த வெப் சீரிஸ் வரும் நவம்பர் 10, 2023 முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.
வித்தியாசமான களங்களில், அழுத்தமான படைப்புகளை வழங்கி வரும், இயக்குநர் அருண்ராஜா இயக்கும் முதல் வெப் சீரிஸ் இது. திரைக்கதையையும் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார்.
இந்த சீரிஸை முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளது. யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உட்பட நான்கு பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதியுள்ளனர்.
சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். பி.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர். நடன அமைப்பை அசார் மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.