Friday, March 28, 2025
spot_img
HomeMovie Reviewலப்பர் பந்து சினிமா விமர்சனம்

லப்பர் பந்து சினிமா விமர்சனம்

Published on

ஸ்போர்ட்ஸ் டிராமா படங்களில் போட்டி, பொறாமை திறமையாளர்களுக்கு எதிராக நடக்கும் அக்கிர அநியாயங்கள் என பார்த்துப் பழகிய கண்களுக்கு காதல், காமெடி கலாட்டாக்களை கலந்து கட்டி பார்க்கும் வாய்ப்பை தந்திருக்கிற ‘லப்பர் பந்து.’

இளைஞன் அன்பு (ஹரிஷ் கல்யாண்), தான் காதலிக்கிற பெண்ணின் அப்பாவுடன் கிரிக்கெட் களத்தில் மோதுகிறான். அதனால் அவருக்கு எதிரியாகிறான். அன்பு காதலிக்கும் பெண்ணின் அம்மா கிரிக்கெட் விளையாட்டை வெறுப்பவர். காதலி, தன் அம்மா ஒத்துக்கொண்டால் மட்டுமே கல்யாணத்துக்கு சம்மதிக்கும் மனநிலையில் இருக்கிறார்.

இப்படி அன்புக்கு காதலிலும் விளையாட்டிலும் சிக்கல் உருவான நிலையில் அடுத்தடுத்து நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் காரசாரமான சண்டை சச்சரவுகள் அரங்கேறுகிறது; வயிறு வலிக்க சிரிக்கும்படியான சம்பவங்களும் கடந்து போகிறது; காதல் விவகாரத்தில் நாம் எதிர்பார்ப்பதே நடக்கிறது. இயக்கம் தமிழரசன் பச்சமுத்து

கிரிக்கெட் பேட்டை தொடும்போது வெற்றி பெறுவதில் உறுதியாக இருப்பது, காதலில் வருகிற பிரச்சனைகளை சமாளிக்கும்போது நிதானம் காட்டுவது என இரண்டு பக்கமும் ஹரிஷ் கல்யாணின் கச்சிதமான நடிப்பு கவர்கிறது.

‘கெத்து’ என்ற பெயரைச் சுமந்து கிரிக்கெட்டில் கெத்தாக வெறித்தனம் காட்டியிருக்கும் அட்டகத்தி தினேஷ், கல்யாண வயதிலிருக்கும் பெண்ணுக்கு தந்தையாக தோற்றத்திலும் நடிப்பிலும் முதிர்ச்சி காட்டியிருக்கிறார்.

அதட்டலும் உருட்டலுமான நடிப்பால் தன் பாத்திரத்தை பலப்படுத்தியிருக்கிறார் தினேஷுக்கு மனைவியாக வருகிற ஸ்வாசிகா.

டெம்ப்ளேட் காதலியாக வந்தாலும், காதலிப்பவனை தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன் என தன் அம்மாவிடம் ஆவேசம் காட்டும்போது அட என்றிருக்கிறது சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியின் நடிப்பு.

காளி வெங்கட்டுக்கு கம்பீரமான வேடம்; நடிப்பிலும் கம்பீரம் தெரிகிறது. பால சரவணன் கதையின் கனத்தை பங்கிட்டுக் கொள்ளவும் கலகலப்புக்கும் உதவியிருக்கிறார்.

விளையாட்டில் இணைபவர்களிடையே சாதி பார்ப்பது, சூழ்ச்சியால் ஜெயிக்க நினைப்பது என அதிரடியாக களமாடியிருக்கிறார் டி எஸ் கே. மற்றவர்களும் கதையோடு இணைந்து பயணித்திருக்கிறார்கள்.

ஆதித்யா கதிரின் கிரிக்கெட் நேர்முக வர்ணனைகளும், மைதானத்தில் ஒலிக்கும் விஜய்காந்த் பாடலும் வெற்றி தோல்வி தருணத்துக்கேற்ப மாறுகிற மற்ற பாடல்களும் ரசிக்க வைக்கின்றன.

ஷான் ரோல்டனின் பின்னணி இசை ஊக்கமருந்தாக மாறி கதையோட்டத்துக்கு சுறுசுறுப்பு தந்திருக்க, ‘சில்லாஞ்சிறுக்கியே’ பாடல் தாலாட்டின் சுகத்தை தந்துபோகிறது.

ஒளிப்பதிவு நேர்த்தி.

நடிகர் நடிகைகள் தேர்வு, அவர்களின் நடிப்பு, காதல், மோதல், காமெடி, நடக்கும் கிரிக்கெட் போட்டிகள் என படத்தில் இடம்பெற்ற அத்தனை சங்கதிகளும் மனதுக்கு நிறைவு தரும்படி இருப்பதால், தாராளமாய் தியேட்டருக்கு போகலாம்; ஏராளமாய் மகிழலாம்!

Rating 4.5 / 5

Latest articles

காமெடி படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு என்பதை மனதில் வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்! -‘கொஞ்சநாள் பொறு தலைவா’ படத்தின் டிரெயலர் வெளியீட்டு விழாவில் ஆருத்ரன் பிக்சர்ஸ் கலியமூர்த்தி பேச்சு

அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், ஆருத்ரன் பிக்சர்ஸ் எஸ் முருகன் தயாரிப்பில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள 'கொஞ்ச...

ராணுவ வீரரின் காதல் கதையில் உருவாகும் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ படத்துக்கு கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை!

அனுராதா அன்பரசுவின் ஏஏஏ பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி.' இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா பின்னணி இசையமைத்தால்...

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலில் கிடைத்த அமோக வரவேற்பு… உற்சாகத்தில் படக்குழு!

  விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்துக்கு அற்புதமான...

More like this