தரமான திரைப்படங்களை வழங்கி வருகிற, ‘இந்தியன் 2’, ‘வேட்டையன்’, ‘விடாமுயற்சி’ என இந்திய அளவில் அடுத்தடுத்து எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிற ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரன் தற்போது, ‘லாக்டவுன்’ என்ற படத்தை பிரமாண்டமாகத் தயாரிக்கிறார்.
‘பிரேமம்’ படம் மூலம் கவனம் ஈர்த்து, தற்போது ‘தில்லு ஸ்கொயர்’ படம் மூலம், தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்திருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், இந்த படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
புதுமையான திரைக்கதையில், லாக்டவுன் காலகட்டத்தில் நடக்கும், அழகான படைப்பாக அறிமுக இயக்குநர் ஏ ஆர் ஜீவா இயக்குகிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பைப் பெற்று, ரசிகர்களிடம் ஆவலைத் தூண்டியுள்ளது.
என் ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோரின் மயக்கும் இசையுடன், கே.ஏ.சக்திவேலின் அசத்தலான ஒளிப்பதிவில், இந்த படம் அற்புதமான சினிமா அனுபவமாக இருக்கும் என நம்பலாம்.

