Friday, November 15, 2024
spot_img
HomeCinema‘குண்டான் சட்டி' சினிமா விமர்சனம் 

‘குண்டான் சட்டி’ சினிமா விமர்சனம் 

Published on

முழுக்க முழுக்க குழந்தைகளை குஷிப்படுத்தும்படியான திரைப்படங்கள் எப்போதாவதுதான் வருகின்றன. அந்த வரிசையில் இப்போது வந்திருக்கிறது ‘குண்டான் சட்டி.’ அதுவும் 2டி அனிமேஷன் படைப்பாக!

குழந்தைகள் கொண்டாடும் கதையம்சத்தோடு, அவர்களுக்கு நல்லது கெட்டது சொல்லிக் கொடுக்கிற பாடமாகவும் இந்த படத்தை இயக்கியிருப்பது 12 வயது நிரம்பிய ஒரு பெண் குழந்தை. பெயர் பி கே அகஸ்தி.

வயல்வெளிகள், மூங்கில் தோப்புகள், பாய்ந்தோடும் நதி என்றிருக்கும் அந்த பசுமையான கிராமத்தில் குப்பனும் சுப்பனும் உயிருக்குயிரான நண்பர்கள். அவர்களைப் போலவே அவர்களின் பிள்ளைகள் குண்டேஸ்வரன் (குண்டான்) ‘சட்டி’ஸ்வரன் (சட்டி) இருவரும் நெருங்கிய நண்பர்களாக வலம் வருகிறார்கள்.

குண்டானும் சட்டியும் கிராமத்திலுள்ள கோயிலுக்கு நன்மை செய்ய நினைக்கிறார்கள். தலையில் சட்டியோடு பிறந்திருக்கும் சட்டிஸ்வரனுக்கு ஒருவித விசேச சக்தியிருக்கிறது. அதன் மூலம் நினைத்ததை செய்கிறார்கள். அதனால், கோயில் நிலத்தில் விவசாயம் செய்யும் பண்ணையாரின் கோபத்துக்கு ஆளாகிறார்கள்.

அடுத்ததாக ஆதரவற்றோர் இல்லத்துக்கு உதவி செய்ய நினைக்கிறார்கள். அதனால், கொரோனா காலத்தில் மளிகைப் பொருட்களைப் பதுக்கிய கடை முதலாளியின் பகை வந்து சேர்கிறது.

மிகமிக வறுமை சூழ்ந்த நிலையிலிருக்கும் ஒரு குடும்பத்துக்கு நல்லது செய்கிறார்கள். அதனால், அந்த ஊரில் அநியாய வட்டிக்கு கடன் கொடுப்பவரின் எதிர்ப்பைச் சம்பாதிக்கிறார்கள்.

மூன்று தரப்பும் குண்டான் சட்டி மீது புகார் கொடுக்க, அந்த சிறுவர்களின் அப்பாக்கள் அவர்களை தண்டிக்கும் விதமாக மூங்கில் மரத்தில் கட்டி ஆற்றில் இறக்கிவிடுகிறார்கள்.

சிறுவர்கள் ஆற்றில் மிதந்து பக்கத்து கிராமத்தின் வாழைத் தோப்புக்குள் நுழைகிறார்கள். அங்குள்ள ஒட்டுமொத்த மரங்களிலுள்ள வாழைப்பழங்களையும் தின்று தீர்க்கிறார்கள். அதேபோல் அடுத்த கிராமத்திற்கு போய் குறும்பான செயலொன்றைச் செய்து பெரும் நஷ்டத்தை உருவாக்குகிறார்கள். இப்படி தொடர்ந்து அந்த சிறுவர்கள் எக்குத்தப்பாக நடந்துகொள்ள, ஒரு கட்டத்தில் அவர்கள் சுற்றி வளைக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட எல்லாருமாக சேர்ந்து அவர்களுக்கு பெரியளவில் தண்டனை தர முடிவெடுக்கிறார்கள். அதிலிருந்து சிறுவர்கள் தப்பினார்களா இல்லையா என்பது படத்தின் கிளைமாக்ஸ்.

குண்டான், சட்டி இருவரின் அனிமேஷன் தோற்றம் ரசிக்கும்படியிருக்கிறது. ஊரில் ஜாலியாக சுற்றித் திரிவது, சட்டி’யின் சக்தியால் நல்லது செய்து தண்டனையை அனுபவிப்பது, ஏடாகூடமான செயல்களைச் செய்து ஆபத்தில் சிக்குவது என அவர்களுக்கான காட்சிகள் அத்தனையும் குழந்தைகளை மட்டுமல்ல பெற்றோர்களையும் நிச்சயம் கவரும்.

குப்பன், சுப்பன், கோயில் அர்ச்சகர், வட்டிக்கு பணம் கொடுப்பவர், பண்ணையார், சலவைத் தொழிலாளர்கள் என படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கும் விதமும் காட்சிகளும் மிகமிக நேர்த்தி.

குளியல் சோப், டூத் பிரஷ் இரண்டும் பேசுவது சிறுபிள்ளைகளை சிரிப்பு மூட்டும். அதிலிருக்கும் அறிவுரை யோசிக்க வைக்கும்.

தன் மாணவர்கள் தவறு செய்யும்போது ஆசிரியர் என்பவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது அந்த கடைசிக் காட்சி.

திரைக்கதை, வசனம் எழுதிய அரங்கன் சின்னத்தம்பி, சிட்டுக் குருவி போல வட்டம் அடிப்போம் நாங்க’ என்றெழுதிய பாடலுக்கு எம் எஸ் அமர்கீத் (பிரபல இசையமைப்பாளர் செளந்தர்யனின் மகன் இவர்) போட்டுள்ள இசை வாண்டுகளை கண்டிப்பாக ஆட்டம் போட வைக்கும். ‘ஓடஓட விரட்டிப் பிடிப்போம் வெள்ளாட்டை’ பாடலின் துள்ளலிசையும் மனதில் தங்கும்!

கதையின் ஹீரோ தலையில் சட்டியுடன் வருவது, அனிமேஷன் வடிவமைப்பில் நம்மூர் மனிதர்களைப் பார்ப்பது வித்தியாசமான அனுபவம் தருவது உறுதி.

உங்கள் வீட்டு குட்டிச் சுட்டிக்கு நிச்சயம் பிடிக்கும் இந்த குண்டான் சட்டி. அந்தளவுக்கு படம் கெட்டி!

Latest articles

ஐபிஎஸ் தேர்வுக்குத் தயாராகும் கதாநாயகன் போலீஸிடம் சிக்கித் திணறும் ‘எனை சுடும் பனி’ விரைவில் திரையரங்குகளில்!

விழித்திரு, என் காதலி சீன் போடுறா, வாகை ஆகிய படங்களில் நடித்த நட்ராஜ் சுந்தர்ராஜ், 'எனை சுடும் பனி'...

Paramount Pictures presents GLADIATOR 2

Gladiator (2000) was an historic epic helmed by Ridley Scott with Russell Crowe in...

சூர்யாவின் ‘கங்குவா’வுடன் ‘ஃபயர்’ திரைப்படத்தின் டீசர்!

ஜே எஸ் கே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள 'ஃபயர்' திரைப்படத்தின் டீசர், சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படத்துடன் நவம்பர்...

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் டீஸர் வெளியீடு!

கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கியிருக்கும் 'வா வாத்தியார்' படத்தின் அனைத்து பணிகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்...

More like this

ஐபிஎஸ் தேர்வுக்குத் தயாராகும் கதாநாயகன் போலீஸிடம் சிக்கித் திணறும் ‘எனை சுடும் பனி’ விரைவில் திரையரங்குகளில்!

விழித்திரு, என் காதலி சீன் போடுறா, வாகை ஆகிய படங்களில் நடித்த நட்ராஜ் சுந்தர்ராஜ், 'எனை சுடும் பனி'...

Paramount Pictures presents GLADIATOR 2

Gladiator (2000) was an historic epic helmed by Ridley Scott with Russell Crowe in...

சூர்யாவின் ‘கங்குவா’வுடன் ‘ஃபயர்’ திரைப்படத்தின் டீசர்!

ஜே எஸ் கே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள 'ஃபயர்' திரைப்படத்தின் டீசர், சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படத்துடன் நவம்பர்...