HomeMovie Reviewகாதல் ரீசெட் ரிப்பீட் சினிமா விமர்சனம்

காதல் ரீசெட் ரிப்பீட் சினிமா விமர்சனம்

Published on

இன்று நடப்பது இன்றே மறந்துவிடும்; தூங்கியெழுந்தால் புது மனுஷி.
அப்படியொரு நினைவு மறதி நோயால் பாதிக்கப்பட்டவள் அதிதி. இசைத் துறையில் சாதிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருப்பவள். அவள் இணைந்திருக்கிற ‘ஃப்ளை ஹை’ என்ற இசைக் குழுவில் இருக்கிற ஹரியும் அவளும் காதலிக்கிறார்கள். அதே அதிதியை ஒரு தலையாக காதலிக்கிறான் சித்தார்த்.  அதிதி எங்கு போனாலும் பின் தொடர்ந்து செல்வது அவன் வ்ழக்கம்.
ஒரு கட்டத்தில் அதிதியும் ஹரியும் ஸ்காட்லாந்தில் நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக செல்கிறார்கள். சித்தார்த்தும் அவர்களுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து செல்கிறான்.
ஸ்காட்லாந்தில் ஹரிக்கும் அதிதிக்கும் ஒரு பிரச்சனை உருவாக, அதிதி தற்கொலை செய்துகொள்ளத் தயாராகிறாள். அதன்பிறகு பதைபதைக்கும் சிலபல சம்பவங்கள் நடக்க, சித்தார்த் அதிதியிடம் தன் காதலை சொல்கிற சந்தர்ப்பம் அமைகிறது.
அதிதி அவனது காதலை ஏற்றுக்கொண்டாளா இல்லையா என்பது விஜய் இயக்கியிருக்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’டின் மீதிக்கதை…
நினைவு மறதி நோயால் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, யார் இருக்கிறார்கள், யார் போகிறார்கள், யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதை புரிந்துகொள்ள முடியாமல், புரிந்துகொண்டதை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் தவிக்கிற கதாபாத்திரத்துக்கு பதட்டமான முகபாவங்கள் மூலம் உயிரூட்டியிருக்கிறார். படம் முழுக்க அவரை அதே பதட்டத்துடன் பார்ப்பது பரிதாபமாகவும் இருக்கிறது. சலீப்பூட்டவும் செய்கிறது.
ஒரு தலைக் காதலராக மதும்கேஷ். கதைப்படி கதாநாயகன் என்றாலும் எந்த நேரமும் முகத்தை ஒருவித இறுக்கத்துடன் வைத்திருப்பதைப் பார்த்தால் வில்லத்தனமாக எதையோ செய்வதற்கு காத்திருப்பவர் போலிருக்கிறது. அவர் ஏன் அதிதியை வருடக்கணக்கில் பின் தொடர்கிறார் என்பதற்கான காரணம் மனதைக் கவர்கிறது. ஒரு கட்டத்துக்கு மேலும் அதிதியை மறைந்து மறைந்து பின் தொடர்வது அநாவசியம் என்ற எண்ணம் வருகிறது.
ஹரியாக வருபவர் மலையாள நடிகர் அர்ஜுன் அசோகன். காதலர், சந்தர்ப்பவாதி, பிராடு என கலவையான கதாபாத்திரத்தை ஏற்று துடிப்பாக நடித்துள்ளார்.
குறிப்பிட்டுச் சொல்லும்படியான கேரக்டரில் வருகிறார் எம் எஸ் பாஸ்கர். அவருக்கும் சீரியஸ் ரோல்தான். இருந்தாலும் சில தருணங்களில் சிரிக்க வைக்கிறார். ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் என இன்னும் ஒருசிலர் படத்தில் இருக்கிறார்கள்.
ஸ்காட்லாந்தின் அழகை பலமடங்கு அழகாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா. ஹாரிஸ் ஜெயராஜ் இசை இளையராஜாவை நினைவூட்டுவதை தவிர எந்த தாக்கதையும் தரவில்லை.
நினைவாற்றல் பிரச்சனையில் சிக்கியிருக்கிற ஒரு பெண்ணிடம் இரு நபர்கள் தாங்கள் காதலை சொல்ல முயற்சிக்கிறார்கள் என்ற ஒன்லைன் அசத்தல்தான். அதற்கான திரைக்கதை மனம்போன போக்கில் பயணப்பட ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படம் பார்ப்பவர்களை மூட் அப்செட் என்ற நிலைக்கு கொண்டு போகிறது.
Rating 2 / 5

Latest articles

‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசருக்கு கிடைத்துவரும் ரசிகர்களின் அமோக வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=tzjKiAKfTqE பிக்பாஸ் ராணவ் மற்றும் ரோஸ்மின் நடித்துள்ள ‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசரை நடிகை ரீமா சென்...

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள தீயோர் கூடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள 'தீயோர் கூடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தேனிசை தென்றல் தேவா வெளியிட்டு படக்குழுவை...

TN 2026 சினிமா விமர்சனம்

இந்த படத்தின் டிரெய்லரில் கதாநாயகன் நட்டி, நடிகரும் த வெ க தலைவருமான விஜய் போல் தோன்றியதை வைத்து,...

More like this

‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசருக்கு கிடைத்துவரும் ரசிகர்களின் அமோக வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=tzjKiAKfTqE பிக்பாஸ் ராணவ் மற்றும் ரோஸ்மின் நடித்துள்ள ‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசரை நடிகை ரீமா சென்...

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள தீயோர் கூடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள 'தீயோர் கூடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தேனிசை தென்றல் தேவா வெளியிட்டு படக்குழுவை...