Thursday, February 22, 2024
spot_img
HomeCinemaமூச்சிருக்கும் அனைவருக்கும் இந்த படத்தின் கதை பொருந்தும்! - ‘கபில் ரிட்டன்ஸ்' பட விழாவில் இயக்குநர்...

மூச்சிருக்கும் அனைவருக்கும் இந்த படத்தின் கதை பொருந்தும்! – ‘கபில் ரிட்டன்ஸ்’ பட விழாவில் இயக்குநர் ஸ்ரீனி சௌந்தரராஜன் பேச்சு

Published on

கிரிக்கெட் பவுலரை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ‘கபில் ரிட்டன்ஸ்.’

இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனமெழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கிறார் பேராசிரியர்.ஸ்ரீனி சௌந்தரராஜன். அவருடன் நிமிஷா, ரியாஸ்கான், ‘பருத்திவீரன்’ சரவணன், வையாபுரி, மாஸ்டர் பரத், மாஸ்டர் ஜான், பேபி ஷர்ஷா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். படத்தை தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கிறது.

படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

படக்குழுவினரோடு பேராசிரியர் சுப வீரபாண்டியன், இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு, கவிஞர் சினேகன், பட தயாரிப்பாளர் என்.விஜயமுரளி நடிகர் வையாபுரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் படத்தின் இயக்குநர் பேராசிரியர்.ஸ்ரீனி செளந்தரராஜன் பேசியபோது, ‘‘உங்கள் கனவை நிறைவேற்ற மூச்சிருக்கும் வரை முயற்சி செய்யுங்கள் என்பார்கள். அதற்கேற்ப மூச்சிருக்கும் அனைத்து நபர்களுக்கும் இந்த படத்தின் கதை பொருந்தும்” என்றார்.

சுப வீரபாண்டியன் பேசியபோது, ‘‘நான் இந்த விழாவில் கலந்து கொள்வதை பற்றி குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் அழைப்பை பதிவிட்டிருந்தேன். அதை தொடர்ந்து, திரைப்பட விழாவில் நீங்கள் எப்படி? அதுவும் கடவுள் நம்பிக்கையுள்ள இயக்குநர் பேரரசும், கடவுள் நம்பிக்கையற்ற நீங்களும் ஒரே மேடையில் எப்படி? என பல்வேறு விதமாக கேள்விகள் எழுப்பப்பட்டது.

வெவ்வேறு கட்சிகள், கொள்கைகள் என்பது வேறு. மேடைகளில் ஒன்றாக சந்திப்பது வேறு. திரைப்படத் துறைக்கும் அரசியலுக்கும் தொடர்பு காலங்காலமாக இருக்கிறது. திரைப்படங்களில் நடிக்காமல் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்திருக்க முடியுமா? அதில் வெற்றி தான் பெற்றிருக்க முடியுமா? நாம் கலையை நேசிப்பதை விட கலைஞர்களின் நிலையை சிறப்பாக நேசிக்க கற்றுக் கொண்டிருக்கின்றோம். ஆயிரம் மேடைகளில் பேசி புரியவைப்பதை, திரைப்படத்தில் அரை மணி நேரத்தில் புரியவைத்துவிட முடியும். படத்தை ஒரு முறை பார்த்தால் போதும் அது மனதில் நிற்கும்.

திரைப்படம் எடுப்பது நல்ல தொழில்தான். நல்ல படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்த்தால் அது தொண்டு. இதை கருத்தில் கொண்டு நல்ல கதையை எடுத்திருக்கிறார் ஸ்ரீனி சௌந்தரராஜன். அதனை மிகச்சிறந்த தொண்டாக பார்க்கிறேன். படத்தின் பாடல்களை ஒரு முறை கேட்டேன், நான்கு ஐந்து முறை கேட்கத் தோன்றியது. இதுவே இந்த படத்திற்கு வெற்றி” என்றார்.

கவிஞர் சினேகன் பேசியபோது, ‘‘பொதுவான கனவுகளும் நிறைவேற அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. ஆனால், இந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீனி சௌந்தரராஜன் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு உருவாகிருக்கிறார். நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறார்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசியபோது, ‘‘இந்த விழாவின் சிறப்பு விருந்தினர் ஐயா சுப.வீ தான். அவருடைய வாழ்த்து படத்திற்கு முக்கியமானது. நான் கடவுள் ஏற்பாளர், அவர் கடவுள் மறுப்பாளர். சுப.வீ ஐயா நல்லதையே நினைப்பவர். அவரின் மனது கடவுள் போன்றது. நான் கடவுளையும் வணங்குகிறேன். அவரையும் வணங்குகிறேன்.

படத்தை எடுத்துக் கொண்டால் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்றாற்போல் எடுத்திருக்கிறார் இயக்குநர் பேராசிரியர் ஸ்ரீனி.சௌந்தரராஜன். நான் படம் பார்க்க சென்றால் என் மகளோடு தான் செல்வேன். அந்த வகையில் பெண் குழந்தைகளும் பார்க்கும்படி இப்படம் உள்ளது. இளைஞர்களும் பெற்றோர்களும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான படம்” என்றார்.

படக்குழு:-
ஒளிப்பதிவு – ஷியாம் ராஜ்
இசை – ஆர்.எஸ்.பிரதாப் ராஜ்
பாடல்கள் – சினேகன், பா.விஜய், அருண்பாரதி
மக்கள் தொடர்பு – வெங்கட்
நிர்வாகத் தயாரிப்பு – ஏ.ஆர்.சூரியன்

Latest articles

உறியடி விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி!

விஜய்குமார் 'உறியடி', 'ஃபைட் கிளப்' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர். அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்...

யோகிபாபு நடிக்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படத்தை இயக்கும் சுரேஷ் சங்கையா!

யோகிபாபு கதைநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம், சுரேஷ் சங்கையா இயக்க டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் படைப்பாக உருவாகிறது. லவ்லின்...

இந்து, முஸ்லீம் பிரிவினையை தூண்டுவது அரசியல்வாதிகள்தான்! -வில்லங்க விவகாரங்களோடு உருவான ‘கிடுகு’ பட இயக்குநரின் ‘நாதுராம் கோட்சே.’

'கிடுகு' பட இயக்குநரின் அடுத்த படைப்பாக, மகாத்மா காந்தியின் மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள...

பல்வேறு படங்களில் கதாநாயகியாக கலக்கும் அறிமுக நடிகை ஜிஜ்னா!

பல ஆண்டுகளாக, இந்த இணையற்ற குணங்கள் மற்றும் நடிப்பால் நம்மை கவர்ந்த பல திறமையான நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்....

More like this

உறியடி விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி!

விஜய்குமார் 'உறியடி', 'ஃபைட் கிளப்' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர். அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்...

யோகிபாபு நடிக்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படத்தை இயக்கும் சுரேஷ் சங்கையா!

யோகிபாபு கதைநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம், சுரேஷ் சங்கையா இயக்க டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் படைப்பாக உருவாகிறது. லவ்லின்...

இந்து, முஸ்லீம் பிரிவினையை தூண்டுவது அரசியல்வாதிகள்தான்! -வில்லங்க விவகாரங்களோடு உருவான ‘கிடுகு’ பட இயக்குநரின் ‘நாதுராம் கோட்சே.’

'கிடுகு' பட இயக்குநரின் அடுத்த படைப்பாக, மகாத்மா காந்தியின் மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள...