Monday, March 24, 2025
spot_img
HomeCinemaதிரும்பிய பக்கமெல்லாம் பிரபாஸின் 'கல்கி' படம் பற்றி பேச்சு... படத்தின் நட்சத்திரங்கள் பேசியதெல்லாம் இதோ இந்த...

திரும்பிய பக்கமெல்லாம் பிரபாஸின் ‘கல்கி’ படம் பற்றி பேச்சு… படத்தின் நட்சத்திரங்கள் பேசியதெல்லாம் இதோ இந்த வீடியோவில்!

Published on

எல்லா பக்கமும் ‘கல்கி 2898 கிபி’ படத்தின் பேச்சாகவே இருக்கிறது. சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து  மாய உலகைகாட்டும் இந்த மகத்தான படைப்பின் வெளியீட்டை நோக்கி ரசிகர்கள், பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் இப்படத்திற்காக, மிகவும் தனித்துவமான விளம்பர உத்திகளை பயன்படுத்தி வருவது அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

படத்தின் டிரெய்லரைத் தொடர்ந்து , தயாரிப்பாளர்கள் இப்போது கல்கி 2898 கிபி படத்தின் க்ரோனிகல்ஸ் என்ற நேர்காணல் தொடரை வெளியிட்டுள்ளனர். இந்தத் தொடரில் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஸ்வப்னா தத் மற்றும் பிரியங்கா தத் ஆகியோருடன் பான் இந்தியா சூப்பர் ஸ்டார் நட்சத்திரங்களும் பங்கேற்றுள்ளனர். வீடியோவில் நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் தாங்கள் பணியாற்றிய சுவாரஸ்ய அனுபவங்களைப் பற்றியும், இப்படத்தினைப் பற்றியும் பல விசயங்களை பகிர்ந்துள்ளனர்.

இந்த வீடியோவில், மெகாஸ்டார் அமிதாப் பச்சன், “பிரபாஸ் மற்றும் பிரபாஸின் அனைத்து ரசிகர்களும், தயவு செய்து என்னை மன்னிக்கவும், இந்தப்படத்தினை பற்றி தெரியவந்த போது, தயாரிப்பாளர்கள் ஸ்வப்னா தத் மற்றும் பிரியங்காவிடம் “இது இயக்குநர் நாகியின் ஐடியாவா, அல்லது உங்கள் ஐடியாவா ? என்று கேட்டேன். அதற்கு தத் சகோதரிகள், “நாகி நம்மருகே இருக்கும் போது தனியாக யோசிக்க ஏதும் உள்ளதா என்ன? ” என்று பதிலளித்தனர் என்றார்.

தீபிகா படுகோன் பிரபாஸை போனில் அழைத்ததை குறிப்பிட்டு, “கமல் சாருடன் எங்கள் முதல் நாள் படப்பிடிப்பை முடித்த, சிறந்த அனுபவத்தை கூறவே அழைத்தேன்” என்று தெரிவித்தார். பிரபாஸ் கூறும்போது, “என் திரை வாழ்க்கையில் இதுவே சிறந்த கதாபாத்திரம் என்றார். படத்தின் கான்செப்ட் குறித்து கமல்ஹாசன் கூறுகையில், “இந்தியா வித்தியாசமான களங்களுக்கு தயாராக உள்ளது, இக்கதையை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்” என்றார்.

இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள, கல்கி 2898 கிபி திரைப்படம் ஜூன் 27, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகிய நட்சத்திர நடிகர்களுடன், இப்படம் ஒரு இணையற்ற சினிமா அனுபவமாக இருக்கும்.

Latest articles

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...

அரசியல் தலையீடுகளால் மாணவ சமூகம் எப்படியெல்லாம் பாழாகிறது என்பதை இந்த படம் எடுத்துக் காட்டியுள்ளது! -‘அறம் செய்’ படம் பார்த்து பாராட்டிய தொல் திருமாவளவன்

  அறம் செய் என்ற திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொண்டு படத்தை பார்த்த தொல்.திருமாவளவன் தன் கருத்துகளை பகிர்ந்துகொண்டபோது... இயக்குநர் எஸ்...

More like this