ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, டி ஜெ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்க, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடந்து கொண்டிருந்த ‘காதலிக்க நேரமில்லை‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவு பெற்று பட வெளியீட்டுக்கு முந்தைய பணிகள் துவங்கியுள்ளது விரைவில் படத்தின் பாடல்கள், டீசர், டிரெய்லர் வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது.
படக்குழு:-
தயாரிப்பு: ஜெயன்ட் மூவிஸ்
இசை: எ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு: கேவ்மிக் ஆரி
படத்தொகுப்பு: லாரன்ஸ் கிஷோர்
இணை தயாரிப்பு: எம்.செண்பகமூர்த்தி, ஆர்.அர்ஜுன் துரை