பெருந்தலைவர் காமராஜரின் 48வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் அவரது நினைவு இல்லத்தில் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இயக்குநர் சீனு ராமசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். ‘காமராஜ்’ திரைப்படத்தின் இயக்குநர் அ. பாலகிருஷ்ணன், சீனு ராமசாமியுடன் இணைந்து அங்கிருந்தவர்களுக்கு உணவு வழங்கினார்.
காமராஜர் நினைவு இல்லத்தில் அமைந்துள்ள பெருந்தலைவரின் திருவுருவ சிலைக்கு சீனு ராமசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இது குறித்து பேசிய இயக்குநர் சீனு ராமசாமி, “நாடு போற்றும் நல்ல தலைவரான பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சியில் அவர் இல்லத்தில் நடக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவரது நினைவை போற்றுவதில் பெருமை அடைகிறேன். தமிழரின் கல்வித் தந்தை, தூய்மை அரசியலின் பிதா கர்மவீரரின் புகழ் வாழ்க” என்றார்.