Sunday, July 14, 2024
spot_img
HomeCinemaஇரண்டு கோடி பார்வைகளை எட்டவிருக்கும் டீசர்... சூர்யாவின் 'கங்குவா’ படக்குழு குஷி!

இரண்டு கோடி பார்வைகளை எட்டவிருக்கும் டீசர்… சூர்யாவின் ‘கங்குவா’ படக்குழு குஷி!

Published on

சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டீசர், மும்பையில் நடந்த புகழ்பெற்ற கிராண்ட் அமேசான் பிரைம் வீடியோ இந்தியா நிகழ்வின் போது பிரமாண்டமாக வெளியிடப்பட்டது.

இந்த டீசர் மேக்கிங் மற்றும் விஎஃப்எக்ஸ் பணிகளுக்காக உலகம் முழுவதிலுமிருந்து அமோகமான பாராட்டுகளை பெற்றுள்ளது. அதனால் மகிழ்ச்சியடைந்துள்ள விஎஃப்எக்ஸ் குழு படத்தில் இன்னும் சிறப்பான அம்சங்களைத் தர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

நடிகர் சூர்யாவின் ஈர்க்கும் திரை இருப்பும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் வசீகரிக்கும் பின்னணி இசையும், அசத்தலான காட்சியமைப்பும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. கூடுதலாக, ’அனிமல்’ படத்தின் வெற்றி மூலம் அனைவரையும் ஈர்த்த நடிகர் பாபி தியோலின் வலுவான நடிப்பும் படத்திற்கு இன்னும் வலு சேர்த்திருக்கிறது. டீசர் வெளியான குறுகிய காலத்தில் 1.8 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது என்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சிவா இயக்கத்தில், வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் ‘கங்குவா’ படம் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். மிலன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, நிஷாத் யூசுப் எடிட்டராக பணியாற்றினார். சுப்ரீம் சுந்தர் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். எழுத்தாளர் ஆதி நாராயணாவுடன் இணைந்து மதன் கார்க்கி வசனங்களை எழுதியுள்ளார். விவேகா மற்றும் மதன் கார்க்கி பாடல் வரிகளில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

சவுண்ட் அண்ட் விஷன் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த லாரன்ஸ் விஷ்ணு ரெக்கார்டிங் இன்ஜினியர். அனு வர்தன் மற்றும் தட்ஷா பிள்ளை ஆகியோர் ராஜனுடன் இணைந்து ஆடை வடிவமைப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். செரினாவும் குப்புசாமியும் ஒப்பனையை கவனித்திருக்க, ரஞ்சித் அம்பாடி சிறப்பு ஒப்பனையை கையாண்டுள்ளார். ஷோபி மற்றும் பிரேம் ரக்ஷித் படத்திற்கு நடன இயக்குநர்களாக பணியாற்றியுள்ளனர்.

Latest articles

எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் இயக்குநராக அறிமுகமாகும் ‘ஃபுட்டேஜ்’படத்தின் டிரெய்லர் வெளியானது!

எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் 'ஃபுட்டேஜ்'படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி சினிமா ஆர்வலர்கள் மற்றும்...

இந்தியன் 2 சினிமா விமர்சனம்

'அதே டெய்லர்; அதே வாடகை' டைப்பில் 'அதே லஞ்சம்; அதே ஊழல்; அதே தண்டனை' என வர்மக்க(கொ)லை மன்னன்...

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2.’ வேல்ஸ் ஃபிலிமோடு இணைந்து தயாரிக்கும் விக்னேஷ் சிவன்!

'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் உருவாகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி பட...

யூடியூபர் ஹரி பாஸ்கர், லாஸ்லியா நடிக்கும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பிரபல யூடியூபர் ஹரி பாஸ்கர், பிக்பாஸ் லாஸ்லியா நடிக்க அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள...

More like this