ஆண்ட்ரியா முதன்மை பாத்திரத்தில் நடிக்க, காட்டை மையமாக வைத்து நாஞ்சில் இயக்கியுள்ள படம் ‘கா.’
வரும் மார்ச் 22; 2024 அன்று திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் நாஞ்சில் பேசியபோது, ”மெசேஜ் சொல்வது என்பது சினிமா இல்லை என்பதை நான் நம்புகிறேன். சினிமா என்பது அனுபவம் அதிலிருந்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். படம் ஆரம்பித்தலிருந்து இன்று வரை உடன் நிற்கிற நடிகை ஆண்ட்ரியாவிற்கு நன்றி. இந்த படம் உங்கள் மனதை ஆக்கிரமிக்கும் ஒரு படமாக இருக்கும்” என்றார்.
நடிகை ஆண்ட்ரியா பேசியபோது, ”காடு எனக்குக் கடவுளை விட மிகவும் பிடிக்கும். நிஜமான சிக்னலே இல்லாத பல இடங்களில் காட்டின் உள்ளே போய் படம் எடுத்துள்ளோம். நாங்கள் பட்ட கஷ்டத்திற்குப் பலன் கிடைக்கும்.
நாஞ்சில் மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு இப்படத்தை முடித்துள்ளார். கொரோனாவிற்கு முன்னதாக கேட்ட கதை இப்போது திரைக்கு வந்துள்ளது. ஒரு படம் குழந்தை என்றால் இயக்குநரும் தயாரிப்பாளரும் அம்மா அப்பா மாதிரி. அவர்கள் இருவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே படம் நன்றாக வரும். அந்த வகையில் இப்படத்தில் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ள அனைவருக்கும் நன்றி” என்றார்.
படத்தை தயாரித்த சசிகலா புரொடக்சன்ஸ் ஆண்டனி தாஸ், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், டான்ஸ் மாஸ்டர் லோகு, ஸ்டண்ட் மாஸ்டர் இளங்கோ, நடிகர் கமலேஷ், இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு, இயக்குநர் பாக்யராஜ், இயக்குநர் ஆர் வி உதயகுமார், தயாரிப்பாளர் கே ராஜன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.
படக்குழு:
இயக்குனர் – நாஞ்சில்
இசை – சுந்தர் சி பாபு
ஒளிப்பதிவு – அறிவழகன்
கலை – பழனிவேல்
எடிட்டிங் – எலிசா
ஸ்டண்ட் – எடி மின்னல் இளங்கோ
பாடலாசிரியர் – பாலா சீதாராமன்
மக்கள் தொடர்பு – பரணி அழகிரி, திரு முருகன்