தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படம் ‘கண்ணப்பா.’ இந்த படம் பெரும் பொருட்செலவில் மிக பிரமாண்டமாக, மக்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் காவியமாக உருவாகிறது.
ஸ்டார் ப்ளஷ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரை இயக்கி பாராட்டு பெற்ற முகேஷ் குமார் சிங் இயக்கும் இப்படம், இந்திய சினிமா வரலாற்றில் நிலைத்து நிற்கும் ஒரு தலைசிறந்த திரை படைப்பாக உருவாகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்திற்கு மணி சர்மா மற்றும் ஸ்டீபன் தேவஸ்ஸி இரட்டையர்கள் இசையமைக்கின்றனர்.
இந்த படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் இந்திய அளவில் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில்முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் பிரபாஸ் நடிக்கவிருக்கும் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது.
அடுத்ததாக படப்பிடிப்பு நியூசிலாந்து நாட்டில் நடைபெற இருப்பதாகவும், அதற்காக விஷ்ணு மஞ்சு தனது குழுவினருடன் அங்கு முகாமிட்டுள்ள தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடஙகு அதிகரித்தது.
இப்போது படத்தில் இந்திய சினிமாவில் ’தி கம்ப்ளீட் ஆக்டர்’ என்று அழைக்கப்படும் நடிகர் மோகன்லால் முக்கிய வேடமேற்று நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது.
இப்படி தொடர்ந்து இன்ப அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாவதால் படத்தின் மீது ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்து வருவதோடு, இன்னும் என்னென்ன ஆச்சரியங்கள் படத்தில் இருக்கிறது என்பதை அறிவதற்கான தேடலில் ஈடுபட்டுள்ளனர்.