திரையுலகம் தன்னை நோக்கி வரும் திறமையான கலைஞர்களுக்கு வெற்றியை பரிசாகக் கொடுத்து ஊக்குவிப்பதும், அந்த உற்சாகத்தில் அந்த திறமையாளர்கள் அடுத்தடுத்த படைப்புகளை தரமாக தருவதற்கான முயற்சிகளில் இறங்குவதும் வழக்கம்.
அந்த வரிசையில் ஸ்ரீனி சௌந்தரராஜன் தயாரித்து, இயக்கி, கதைநாயகனாக நடித்து கடந்தாண்டு திரையரங்குகளில் வெளியான ‘கபில் ரிட்டன்ஸ்’ என்ற படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. பத்திரிகை, இணையதள விமர்சனங்களில் படத்தின் சிறப்பம்சங்கள் குறிப்பிட்டுப் பாராட்டப்பட்டது.
பாராட்டுக்கள் தந்த உத்வேகத்தில் ஸ்ரீனி சௌந்தரராஜன் புதிய படம் ஒன்றை உற்சாகமாக இயக்குகிறார். படத்தின் கதை புதிய கோணத்தில் இருக்கும் என்று சொல்கிறார்.
படம் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் தெரியவரும்.