Tuesday, June 17, 2025
spot_img
HomeCinemaஆசியாவின் மிகப்பெரிய அறிவியல் விழாவில் மாணவர்களோடு உரையாடிய நடிகர் பிரபாஸ்! 'கல்கி 2898 ‌AD' படத்தின்...

ஆசியாவின் மிகப்பெரிய அறிவியல் விழாவில் மாணவர்களோடு உரையாடிய நடிகர் பிரபாஸ்! ‘கல்கி 2898 ‌AD’ படத்தின் உருவாக்கம் குறித்த வீடியோ வெளியீடு!

Published on

மும்பை ஐ ஐ டி வளாகத்தில் ‘டெக்ஃபெஸ்ட்’ (Tech Fest) எனும் பெயரில் ஆசியாவின் மிகப்பெரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழா நடைபெற்றது. ‘கல்கி 2898 AD’ படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவர் மாணவர்களுடன் கலந்துரையாடிய போது, திரையுலகில் ‘டார்லிங்’ என அன்புடன் அழைக்கப்படும் ‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸிற்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார். பிரபாஸின் குரலை தொலைபேசி மூலம் கேட்டபோது, அங்கு கூடி இருந்த மாணவர்கள் உற்சாகமாய் குரல் எழுப்பினர். இதைத்தொடர்ந்து இயக்குநர் நாக் அஸ்வின், பிரபாஸை மாணவர்களிடம் உரையாட வைத்தார். இதனால் மாணவர்கள் உற்சாகமடைந்தனர். மாணவர்கள் மற்றும் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்த போது கலந்துரையாடல் நிகழ்வு, உற்சாகத்தின் உச்சத்தை எட்டியது.

எதிர்பாராத இந்த பரபரப்பான தொலைபேசி அழைப்பை விட, ‘டெக் ஃபர்ஸ்ட்’ விழா சிறப்பாக நடைபெறுவதற்கு வேறு சில அம்சங்களும் இடம்பெற்றது.

இயக்குநர் நாக் அஸ்வின் மாணவர்களுடன் உரையாடி, ‘கல்கி 2898 ‌AD’ படத்தில் இடம்பெற்ற பல்வேறு சிறப்பம்சங்களைப் பற்றி எடுத்துரைத்தார். மேலும் அந்த படைப்பை உருவாக்குவதன் பின்னணியில் உள்ள சிக்கலான செயல்முறை குறித்தும், அதனை விளக்கும் வகையிலான வசீகர வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.

‘கல்கி 2898 AD’ வைஜெயந்தி மூவிஸின் வித்தியாசமான சினிமா முயற்சியாகும். இதில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம்… அதன் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுடன் சினிமாவின் எல்லைகளை மறுவரையறை செய்யவுள்ளது.

2024 ஆம் ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படம், ‘காமிக்-கான்’-ல் திரையிடப்பட்டப் போது.. அற்புதமான வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் இந்த அற்புதமான சினிமா அனுபவத்தை காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் அற்புதமான காட்சி மற்றும் கதை சொல்லும் பாணியை விவரிக்கிறது. ‘கல்கி 2898 AD’ ஒரு குறிப்பிடத்தக்க சினிமா பயணமாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது. இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் அதிநவீன தொழில்நுட்பம்… அதன் நட்சத்திர நடிகர்களின் கடின உழைப்புடன் இணைந்திருப்பதால், இது திரை ஆர்வலர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் கண்டிப்பாகக் காண வேண்டிய படைப்பாக இருக்கும்.

Latest articles

பிக்பாக்கெட் படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்து வாழ்த்திய புதுச்சேரி முதலமைச்சர்!

'பிக் பாக்கெட்' என்ற படத்தை, ஓ.டி.டியில் வெளியாகி பிரபலமான ரிவால்வர் படத்தை இயக்கிய ஜெ எஸ் ஜூபேர் அகமத்...

கண்ணப்பா திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்!

தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த்...

தேசிய விருது வென்ற பிரியாமணி, ஆளுமையான நடிகை ரேவதி கூட்டணியின் ‘குட் வைஃப்’ தொடரின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டது!

தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இணைய தொடர் ‘குட்...

More like this

error: Content is protected !!