Tuesday, June 17, 2025
spot_img
HomeCinemaரஜினி, கமல், மம்மூட்டி உள்ளிட்டோர் கேட்டுகொண்டபடி ‘இயக்குநர் சிகரம்' பாலசந்தருக்கு சிலை! விரைவில் அரசிடமிருந்து நல்ல...

ரஜினி, கமல், மம்மூட்டி உள்ளிட்டோர் கேட்டுகொண்டபடி ‘இயக்குநர் சிகரம்’ பாலசந்தருக்கு சிலை! விரைவில் அரசிடமிருந்து நல்ல செய்தி வருமென்கிறார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன்

Published on

கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்கம், இயக்குனர் கே.பாலச்சந்தரின் 9’ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியை, நலத்திட்ட உதவிகளுடன் நடத்தினர்.

தி.நகர் தக்கர் பாபா கலையரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், தொழிலதிபர் விஜிபி சந்தோஷம், இயக்குனர் சரண், நடிகர்கள் பூ விலங்கு மோகன், ரமேஷ் கண்ணா, தாசரதி, மாஸ்டர் பிரபாகரன், சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் சிவன் சீனிவாசன், பாரதிராஜா மருத்துவமனை பிரேம் குமார், வழக்கறிஞர் ஜெகநாதன், நடன இயக்குனர் கிரிஜா ரகுராம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்!

பூச்சி முருகன் பேசுகையில், ரஜினி, கமல், மம்மூட்டி போன்ற முக்கிய நடிகர்களின் கடிதத்தோடு, பாலசந்தருக்கு சிலை வைக்கும் கோரிக்கையை, கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்க பொதுச் செயலாளர் பாபு கொடுத்த கடிதம்,அரசின் பரிசீலனை முடிவில் இருக்கிறது. விரைவில் நல்ல செய்தி வரும் என்றார்!

இயக்குனர் சரண் பேசுகையில், பாலசந்தர் வாழ்ந்த வாரண் சாலைக்கு பாலச்சந்தர் பெயர் வைக்க, அரசுக்கு கோரிக்கை வைத்தார்!

கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க பொதுச் செயலாளர் கவிதாலயா வீ.பாபு, பொருளாளர் முகமது இலியாஸ், இணைச் செயலாளர்கள் கவிதாலயா பழனி, கண்ணப்பன், விக்ரமன் ஆகியோர் நிகழ்ச்சியை நடத்தினார்கள்!

திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் 6,000 பேருக்கு இலவச மருத்துவ அடையாள அட்டை வழங்கப்பட்டது.

மார்னிங் ஸ்டார், சேரிடபுள் ட்ரஸ்ட் மற்றும் லைஃப் கிரீன் சித்த மருத்துவமனை ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் லைப்கீரின் சித்த மருத்துவமனையின் மருத்துவர்கள் கலந்து கொண்டு, இலவச மருத்துவ ஆலோசனைகள் அளித்தனர்.

Latest articles

பிக்பாக்கெட் படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்து வாழ்த்திய புதுச்சேரி முதலமைச்சர்!

'பிக் பாக்கெட்' என்ற படத்தை, ஓ.டி.டியில் வெளியாகி பிரபலமான ரிவால்வர் படத்தை இயக்கிய ஜெ எஸ் ஜூபேர் அகமத்...

கண்ணப்பா திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்!

தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த்...

தேசிய விருது வென்ற பிரியாமணி, ஆளுமையான நடிகை ரேவதி கூட்டணியின் ‘குட் வைஃப்’ தொடரின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டது!

தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இணைய தொடர் ‘குட்...

More like this

error: Content is protected !!