‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’, ‘மாமனிதன்’ உள்ளிட்ட வெற்றி பெற்ற, விருதுகள் குவித்த படங்களை எழுதி இயக்கிய சீனு ராமசாமி இயக்கும் புதிய படம் ‘கோழிப்பண்ணை செல்லதுரை.’
‘ஜோ’ படத்தின் வெற்றியைத் விஷன் சினிமா ஹவுஸ்’ டாக்டர் டி.அருளானந்து தயாரிக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார்.
கதையின் நாயகனாக ஏகன் அறிமுகமாகிறார். பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, லியோ சிவகுமார், மானஸ்வி, பவா செல்லதுரை உள்ளிட்டோருடன் அறிமுக நடிகர்கள் தினேஷ் முத்தையா, திருச்செந்தூர் ஶ்ரீ ராம், சத்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் கிராமத்து மண்சார்ந்த, கைவிடப்பட்ட ஒரு இளைஞனை மையப்படுத்தி, விறுவிறுப்பான திரைக்கதையில் அனைவரும் ரசிக்கும் வகையில் காதல் சித்திரமாய் தயாராகிறது.
படப்பிடிப்பு தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது.
படப்பிடிப்பு:
எழுத்து இயக்கம்: சீனு ராமசாமி
தயாரிப்பு: டாக்டர் டி. அருளானந்து, மேத்யூ அருளானந்து
இசை: என் ஆர் ரகுநந்தன்
ஒளிப்பதிவு: அசோக்ராஜ்
வசனம்: பிரபாகர், சீனு ராமசாமி
படத் தொகுப்பு: ஶ்ரீகர் பிரசாத்
கலை இயக்குநர்: ஆர். சரவண அபிராமன்
ஆடை வடிவமைப்பு: வி.மூர்த்தி
நடனம்: நோபல்
சண்டைப் பயிற்சி: ஸ்டன்னர் ஷாம்
பாடல்கள்: கவிப்பேரரசு வைரமுத்து, கங்கை அமரன், பா.விஜய், ஏகாதசி
நிர்வாகத் தயாரிப்பு: வீர சங்கர்
டிசைனர்: சிந்து கிராஃபிக்ஸ் பவன் குமார்
மேக் அப்: ஏ.பிச்சுமணி
ஸ்டில்ஸ்: மஞ்சு ஆதித்யா
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்