Friday, November 15, 2024
spot_img
HomeCinemaவெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்றிருக்கும் ஹீரோவுக்கு பிராங்க் ஷோ மூலம் கிடைத்த காதலி! படு...

வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்றிருக்கும் ஹீரோவுக்கு பிராங்க் ஷோ மூலம் கிடைத்த காதலி! படு சுவாரஸ்யமான கதைக்களத்தில் விஜய் விஷ்வா நடிக்கும் ‘கும்பாரி.’

Published on

இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ‘கும்பாரி.’

‘ராயல் என்டர்பிரைசஸ்’ சார்பில் டி.குமாரதாஸ் தயாரிக்க, கெவின் ஜோசப் எழுதி, இயக்கியுள்ளார்.

கதாநாயகர்களாக விஜய் விஷ்வா, நலீப் ஜியா நடிக்க, கதாநாயகியாக மஹானா சஞ்சீவி நடித்திருக்கிறார். மேலும் ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி, காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் வரும் ஜனவரி 5; 2024 அன்று வெளியாகிறது. படத்தினை 9V ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.

‘கும்பாரி’ என்றால் குமரி மண்ணின் வட்டார மீனவ மக்கள் வழக்கில் நண்பன் என்று பொருளாம்.

ஆதரவற்ற ஒருவனும் அனாதைச் சிறுவனும் சிறு வயதிலிருந்து நட்பு கொள்கிறார்கள். பிறகு அது இறுகி உறுதியான பிணைப்பாக மாறுகிறது. இருவரும் மீன்பிடிக்கும் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

ஒரு நாள் வேறு ஊரைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணை ஒரு ரவுடிக் கும்பல் துரத்துகிறது. அவள் கண்ணில் படுபவர்களிடம் எல்லாம் உதவி கேட்கிறாள். என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையா என்று கதறுகிறாள். அதைப் பார்த்து மனம் பதைபதைத்துப் பரிதவித்தாலும் யாரும் உதவ முன்வராமல் தயங்கி நிற்கிறார்கள்.

இது நாயகனுக்குத் தெரிகிறது. அவளும் நாயகனிடம் முறையிடுகிறாள். அவன் அவளைத் துரத்தி வந்த அந்தக் கும்பலை அடித்து துவம்சம் செய்கிறான். அடி வாங்கியவர்கள் சிரிக்கிறார்கள். நாயகன் புரியாமல் நிற்கிறான்.

இதில் சுவாரஸ்யம் துரத்தப்பட்ட பெண்ணும் சிரிக்கிறாள். காரணம் அது ஒரு பிராங்க் ஷோவாம். இப்படி பொதுமக்கள் உணர்ச்சிகளோடு விளையாடும் அவர்களின் வியாபார நோக்கமறிந்து கொதிக்கிற நாயகன், இப்படிப் போலியாக நடிக்கும் செயல்களால் உண்மையான ஆபத்து வரும்போது யாரும் காப்பாற்ற வர மாட்டார்கள் என்று நாயகியை ஓங்கி அறைந்து விடுகிறான். இப்படிப்பட்ட வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்ற வெளிப்படையான குணம் கொண்ட நாயகன் மீது காதலில் விழுகிறாள்.

அவள்காதலுக்கு அண்ணன் எதிர்ப்பு தெரிவிக்க காதல் ஜோடி ஊரை விட்டு ஓட, அதன்பிறகு அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

படம் பற்றி தயாரிப்பாளர் குமாரதாஸ் பேசும்போது, ‘‘சிவகார்த்திகேயன் நடித்த ‘மனம் கொத்திப் பறவை ‘ போல் காதலர்கள் செய்யும் பயணம்தான் இப்படம். காதல், நட்பு, நகைச்சுவை, ஆக்சன் என அனைத்தும் கலந்த முழு நீள எண்டர்டெய்னராக இப்படம் உருவாகி உள்ளது” என்றார்.

கும்பாரி காதலோடு, நட்பு பற்றிய படமாகவும் உருவாகியுள்ளது. நட்பைப் பற்றி இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் நட்பதிகாரமே படைக்கும் வகையில் உள்ளது. குமரி மண்ணின் அழகும், மண்மணம் மணக்கும் மொழியும், பாடல்களும் படத்திற்கு வேறு நிறம் காட்டுகின்றன.

படப்பிடிப்பு கடலும் கடல் சார்ந்த இடங்களான கன்னியாகுமரி, நாகர்கோவில், முட்டம் ஆகிய கடற்கரைப் பகுதிகளிலும் கேரளாவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது. ஒரே கட்டமாக 30 நாட்களில் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள் என்பது படக்குழுவின் திட்டமிடுதலுக்கு ஒரு சாட்சியாக இருக்கிறது.

 

Latest articles

ஐபிஎஸ் தேர்வுக்குத் தயாராகும் கதாநாயகன் போலீஸிடம் சிக்கித் திணறும் ‘எனை சுடும் பனி’ விரைவில் திரையரங்குகளில்!

விழித்திரு, என் காதலி சீன் போடுறா, வாகை ஆகிய படங்களில் நடித்த நட்ராஜ் சுந்தர்ராஜ், 'எனை சுடும் பனி'...

Paramount Pictures presents GLADIATOR 2

Gladiator (2000) was an historic epic helmed by Ridley Scott with Russell Crowe in...

சூர்யாவின் ‘கங்குவா’வுடன் ‘ஃபயர்’ திரைப்படத்தின் டீசர்!

ஜே எஸ் கே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள 'ஃபயர்' திரைப்படத்தின் டீசர், சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படத்துடன் நவம்பர்...

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் டீஸர் வெளியீடு!

கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கியிருக்கும் 'வா வாத்தியார்' படத்தின் அனைத்து பணிகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்...

More like this

ஐபிஎஸ் தேர்வுக்குத் தயாராகும் கதாநாயகன் போலீஸிடம் சிக்கித் திணறும் ‘எனை சுடும் பனி’ விரைவில் திரையரங்குகளில்!

விழித்திரு, என் காதலி சீன் போடுறா, வாகை ஆகிய படங்களில் நடித்த நட்ராஜ் சுந்தர்ராஜ், 'எனை சுடும் பனி'...

Paramount Pictures presents GLADIATOR 2

Gladiator (2000) was an historic epic helmed by Ridley Scott with Russell Crowe in...

சூர்யாவின் ‘கங்குவா’வுடன் ‘ஃபயர்’ திரைப்படத்தின் டீசர்!

ஜே எஸ் கே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள 'ஃபயர்' திரைப்படத்தின் டீசர், சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படத்துடன் நவம்பர்...