HomeCinemaதுல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கொத்தா' டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 29-ம் தேதி ரிலீஸ்!

துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கொத்தா’ டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 29-ம் தேதி ரிலீஸ்!

Published on

துல்கர் சல்மான் தாதாவாக நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘கிங் ஆஃப் கொத்தா’ திரைப்படம் செப்டம்பர் 29, 2023 முதல்,  டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி முதன்மை பாத்திரத்தில் நடிக்க,  பிரசன்னா, ஷபீர் கல்லாரக்கல், கோகுல் சுரேஷ், நைலா உஷா, அனிகா சுரேந்திரன், ஷம்மி திலகன், சுதி கொப்பா, செம்பன் வினோத் ஜோஸ், ரித்திகா சிங் மற்றும் சௌபின் ஷாகிர் சிங் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஒரு புதிய உலகத்தில் புதிய அனுபவத்தைப் பெற்று மகிழுங்கள். இந்த பரபரப்பான க்ரைம் டிராமாவை இயக்குநர்  அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார் மற்றும் அபிலாஷ் என் சந்திரன் இப்படத்தினை எழுதியுள்ளார்.

‘கிங் ஆஃப் கொத்தா’ உலகில்  அடியெடுத்து வைக்கும் ராஜு என்ற இளைஞனின் பயணமும்,  கேங்ஸ்டர் உலகில் அவன் ஏற்படுத்தும் மாற்றமும் தான் இந்தப்படத்தின் கதை.  ராஜுவின் பயணத்தில் அவன் வெகு சாதாரண மனிதனாக இருந்து அடிதடியில் அடியெடுத்து வைத்து, கேங்ஸ்டர் உலக தாதாவாக மாறும் அவனின் பரிணாம வளர்ச்சி தான் இப்படம். கோதா நகரில் அவன் அதிகாரத்தின் உச்சத்தை அடைய, தியாகங்களைச் செய்கிறான். இந்தத் திரைப்படம் நிலையான ஒரு கேங்க்ஸ்டர் கதையாக இல்லாமல், அதிவேகமான சினிமா அனுபவத்தைத் தரும், பரபரப்பான திரைக்கதையுடன்  காதலின் பக்கத்தையும் கூறுகிறது.

Wayfarer Films மற்றும் Zee Studios தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம்  நட்சத்திர நடிகர்கள், வித்தியாசமான களம், பரபரப்பான திரைக்கதை, கணிக்க முடியாத திருப்பங்கள் என புதுமையான அனுபவத்தை தருவதுடன், மறக்க முடியாத சினிமாவாக மனதில் பதியும்.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this