சித்தார்த் நடிக்க, ‘8 தோட்டாக்கள்’ ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகும்’3 BHK’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அந்த மகிழ்ச்சியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபீல் குட் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் டைட்டில் அறிவித்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், இதன் டீசரும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த படத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா ஆகியோரும் நடித்துள்ளனர்.
படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா படம் பற்றி பேசியபோது, “மனதை வருடும் இதமான, திருப்தியான கதைகளைத் தயாரிப்பது தயாரிப்பாளராக எனக்கு மகிழ்ச்சியான விஷயம். அந்த அனுபவத்தைக் கொடுத்த ‘3 BHK’ படத்திற்கும், படக்குழுவினருக்கும் நன்றி. திட்டமிட்டபடியே சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்களை மகிழ்விக்கும். படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் உலகளவில் படத்தின் திரையரங்க வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அறிவிப்போம்” என்றார்.