Monday, March 16, 2026
spot_img
HomeCinemaபடத்தில் தம்மு, தண்ணி, ஆடை பற்றியெல்லாம் நாம் பேசக் கூடாது! -'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்'...

படத்தில் தம்மு, தண்ணி, ஆடை பற்றியெல்லாம் நாம் பேசக் கூடாது! -‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ பட விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த் பேச்சு

Published on

உதயகீதம், உயிரே உனக்காக, நினைவே ஒரு சங்கீதம் போன்ற சில்வர் ஜூப்ளி திரைப்படங்களை இயக்கிய கே ரங்கராஜ் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்.’

வாழ்க்கையில் பணம் மட்டும் பிரதானமல்ல என்பதை உணர்த்தும் வகையில் வித்தியாசமாக இருவேறு கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படம் வரும் மார்ச் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் ரங்கராஜ், ”எங்களை இன்று வாழ்த்த வந்திருக்கும் கே எஸ் ரவிக்குமார், ஆர் கே செல்வமணி உட்பட அனைவருக்கும் நன்றி. ஸ்ரீகாந்த் முதல் சிங்கம்புலி, ரமேஷ் கண்ணா, சச்சு, சாம்ஸ் புஜிதா என அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து இந்தப் படத்தை உருவாக்க உதவினார்கள். நான் பத்திரிகையாளானாக இருந்து திரைக்கு வந்தவன். உங்களின் அன்பான ஆதரவை இந்தப் படத்திற்கு தர வேண்டும்” என்றார்.

படத்தின் நாயகன் ஸ்ரீகாந்த், ”திரையுலகில் 25 வருடம் நிறைவு செய்துள்ளேன்.  ரங்கராஜ் சார் ஷூட்டிங்கில் மிகமிக கண்டிப்புடன் இருப்பார், அவர் படைப்பில் நான் இருப்பது மகிழ்ச்சி. சினிமா தவிர எனக்கு எதுவும் தெரியாது. கடைசி வரை சினிமாவில் இருக்கத் தான் ஆசைப்படுகிறேன், படத்தில் தம்மு தண்ணி, ஆடை பற்றி எல்லாம் நாம் பேசக் கூடாது, அது அவரவர் விருப்பம். எது பிடிக்கும் எது பிடிக்காது என மக்கள் முடிவு செய்யட்டும். எனக்குப் பிடித்த படம் சதுரங்கம் அந்தப் படத்தை எப்படியோ கொன்று விட்டார்கள், ஆனால் 12 வருடம் கழித்து ஒரு படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெறுகிறது, இதுதான் சினிமா. ஒவ்வொரு பக்கமும் இருந்து சினிமாவை அழிக்கிறார்கள். எல்லோரும் இணைந்து முதலில் சினிமாவை காப்பாற்ற வேண்டும். சினிமா தான் என் குடும்பம், இன்னும் நான் சினிமாவில் இருப்பதை பெருமையாக நினைக்கிறேன். ரங்கராஜ் சார் படத்தில் இருப்பது பெருமை” என்றார்.

இயக்குநர் ஆர் கே செல்வமணி, ”ஸ்ரீகாந்த் பேசி இப்போது தான் கேட்கிறேன், அதிரடியாக கலக்குகிறார், இதே போல் சினிமாவில் இருந்தால் அவர்தான் சூப்பர் ஸ்டார்” என்றார்.

Latest articles

ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியிட்டு நிகழ்வை மலேசியாவில் பிரமாண்டமாக நடத்திய டத்தோ அப்துல் மாலிக்கின் மனித நேயத்தை பாராட்டி தேசம் ஐக்கான் விருது வழங்கி கெளரவிப்பு!

மலேஷியாவின் திரைப்படத் தயாரிப்பாளரும், திரைப்பட வினியோகஸ்தரும்,தொழில் அதிபருமான டத்தோ அப்துல் மாலிக் புகழ் பெற்று விளங்கி வருகிறார். தமிழ்...

செல்வராகவன் நடித்துள்ள மனிதன் தெய்வமாகலாம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்!

செல்வராகவன் நடித்துள்ள புதிய திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில்,...

மேட் இன் கொரியா சினிமா விமர்சனம்

எளிமையான குடும்பத்துப் பெண் செண்பகத்துக்கு சிறுவயதிலிருந்தே கொரியாவுக்கு போகவேண்டும் என்பது ஆசை. அந்த ஆசை, அவர் ஒருவரை காதலிக்கும்...

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தமிழ்க்குமரன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்பில் உற்சாகமாக நடந்த ரூம் பாய் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! 

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள 'ரூம் பாய்'...

More like this

ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியிட்டு நிகழ்வை மலேசியாவில் பிரமாண்டமாக நடத்திய டத்தோ அப்துல் மாலிக்கின் மனித நேயத்தை பாராட்டி தேசம் ஐக்கான் விருது வழங்கி கெளரவிப்பு!

மலேஷியாவின் திரைப்படத் தயாரிப்பாளரும், திரைப்பட வினியோகஸ்தரும்,தொழில் அதிபருமான டத்தோ அப்துல் மாலிக் புகழ் பெற்று விளங்கி வருகிறார். தமிழ்...

செல்வராகவன் நடித்துள்ள மனிதன் தெய்வமாகலாம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்!

செல்வராகவன் நடித்துள்ள புதிய திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில்,...

மேட் இன் கொரியா சினிமா விமர்சனம்

எளிமையான குடும்பத்துப் பெண் செண்பகத்துக்கு சிறுவயதிலிருந்தே கொரியாவுக்கு போகவேண்டும் என்பது ஆசை. அந்த ஆசை, அவர் ஒருவரை காதலிக்கும்...
error: Content is protected !!