Monday, February 10, 2025
spot_img
HomeCinemaயூடியூபில்தான் நாங்கள் சினிமாவுக்கான பயிற்சியே எடுத்தோம்! -குடும்பஸ்தன் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் நடிகரும் வசனகர்த்தாவுமான...

யூடியூபில்தான் நாங்கள் சினிமாவுக்கான பயிற்சியே எடுத்தோம்! -குடும்பஸ்தன் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் நடிகரும் வசனகர்த்தாவுமான பிரசன்னா பேச்சு

Published on

மணிகண்டன், ஷான்வி நடித்து வெளியான ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் கடந்த மாதம் 24-ம் தேதி திரையரங்கில் வெளியாகி பெரியளலில் வரவேற்பைக் குவித்துள்ளது. அதையடுத்து ரசிகர்களுக்கும் விமர்சனங்களில் ஊக்குவித்த பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய நடிகர் மணிகண்டன், “இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வந்த குறுகிய காலத்திலேயே எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. படம் வெளியான பின்பும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படக்குழுவினர் நாங்கள் அனைவரும் எளிய பின்னணி கொண்டவர்கள். படம் எடுப்பது தனி போராட்டம் என்றாலும் எடுத்த படத்தை மக்களிடம் சரியாக கொண்டு சேர்ப்பது பெரிய போராட்டம். அந்த மலை போன்ற போராட்டத்தை பனி போல எளிமையாக்கி கொடுத்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. எங்களை சரியான விதத்தில் வழிநடத்திய அனைவருக்கும் நன்றி” என்றார்.

இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி, “படம் பார்த்து கொண்டாடிய ரசிகர்களுக்கு நன்றி. நக்கலைட்ஸ் குழுவுக்கு நன்றி. எங்கள் முதல் படத்தை இவ்வளவு பெரிய வெற்றிப் படமாக மாற்றிய அனைவருக்கும் நன்றி” என்றார்.

எழுத்தாளர் பிரசன்னா பாலச்சந்திரன், “நக்கலைட்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. ஓயாத இயந்திரத்தைப் போல எங்கள் பின்னால் அணி ஓடிக் கொண்டிருந்தது. நக்கலைட்ஸ் ஆரம்பித்த இந்த எட்டு வருடங்களில் எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. யூடியூபில்தான் நாங்கள் சினிமாவுக்கான பயிற்சியே எடுத்தோம். ’குடும்பஸ்தன்’ படம் இந்தளவு வெற்றியடையும் என எதிர்பார்க்கவில்லை. அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகை சான்வே மேக்னா, “என்னுடைய முதல் படத்திற்கே இந்தளவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவருடனும் இன்னும் 100 படங்கள் நடிக்க விரும்புகிறேன். ஹைதரபாத்திலும் சீக்கிரம் படம் வெளியாக இருப்பதை எதிர்பார்த்திருக்கிறேன். என் கதாபாத்திரத்தை போல மனைவி வேண்டும் என பலரும் சொல்லியிருந்தார்கள். பணம் என்பது ஒருவரின் வாழ்வில் முக்கியமில்லை என்பதை இந்தப் படம் சொல்லிக் கொடுத்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி” என்றார்.

இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசியதாவது, “நக்கலைட்ஸ் அணியின் மாபெரும் வெற்றிப்படம் இது. அவர்களுக்கும் இது தேவையான விஷயம். அவர்கள் சினிமாவுக்கு வந்து ஜெயித்திருப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’, ‘குடும்பஸ்தன்’ இந்த இரண்டு படங்களும் எளிய முறையில் பல அழுத்தமான விஷயங்களை படமாக்கி ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்திருக்கிறது. கருத்தாக சொல்லாமல் வாழ்வியலையும் சேர்த்து சொன்னதே ‘குடும்பஸ்தன்’ படத்தின் வெற்றி. மணிகண்டன் சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். மொழி தெரியாமல் கதாநாயகியும் சிறப்பான முகபாவனைகளைக் கொண்டு வந்திருக்கிறார். மற்றவர்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். வெகுஜனம் ஏற்றுக்கொள்ளும்படியான படம் இது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

Latest articles

திரைத்துறை ஊழியர்களை ஊக்கப்படுத்த ‘பி.டி.ஜி யூனிவர்சல்’ நிறுவனம் முன்னெடுத்த விழா; இயக்குநர்கள் ஆர் கே செல்வமணி, ஆர் வி உதயகுமார் பங்கேற்பு! 

'டிமாண்டி காலனி 2', 'சென்னை சிட்டி கேங்கஸ்டர்ஸ்', 'ரெட்ட தல' ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ள பிரபல திரைப்பட தயாரிப்பு...

இயக்குநர் ராம் கோபால் வர்மா, நவீன் கல்யாணின் ’அனிமல் ஆராத்யா’ ஃபோட்டோ சீரிஸை வெளியிட்டார்!

பிரபல புகைப்படக் கலைஞர் நவீன் கல்யாண் ‘சாரி கேர்ள்’ ஆராத்யாவை வைத்து ’அனிமல் ஆராத்யா’ என்ற புரட்சிகரமான ஃபோட்டோ...

‘9 AM to 9 PM வாலன்டைஸ் டே’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு நிகழ்வில், படத்திற்கு இலவச டிக்கெட் வழங்கப்போகும் இயக்குநரை பாராட்டிய கே ராஜன்!

'9 AM to 9 PM வாலன்டைன்ஸ் டே' படத்தின் பாடல்களை வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் வெளியிட்டு...

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் தொடக்கவிழா பூஜையுடன் நடந்தது!

அசோக் செல்வன் கதைநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்திற்கு #AS23 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது....

More like this