Wednesday, March 11, 2026
spot_img
HomeCinemaசர்வதேச விருதுகளைக் குவித்த ‘கூழாங்கல்' படத்தின் அப்பா, மகன் பாசப்பிணைப்பு பார்வையாளர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்! -‘ரெளடி...

சர்வதேச விருதுகளைக் குவித்த ‘கூழாங்கல்’ படத்தின் அப்பா, மகன் பாசப்பிணைப்பு பார்வையாளர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்! -‘ரெளடி பிக்சர்ஸ்’ நயன்தாரா, விக்னேஷ் சிவன் நம்பிக்கை

Published on

மிகமிக புதுமையான கதைக்களத்தில் அமைந்த காரணத்தால் வெளியாவதற்கு முன்பே உலகளவில் அங்கீகாரம் பெற்ற படம் ‘கூழாங்கல்.’

அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கருத்தடையான், சிறுவன் செல்லபாண்டி இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்தின் கதை தந்த அற்புதமான உணர்வை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு இந்த படத்தை பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியது நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ‘ரெளடி பிக்சர்ஸ்’ நிறுவனம். அதன் மூலம் , கூழாங்கல் ரோட்டர்டாம் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று மிக உயரிய விருதான டைகர் விருதை வென்றது.

கடந்த 2022-ல் 94வது ஆஸ்கர் விருதுகளுக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக இந்தப் படம் இருந்தது. அதே வருடம் இண்டிபெண்டண்ட் ஸ்பிரிட் அவார்டில் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் சிறந்த ஐந்து திரைப்படங்களில் ஒன்றாக பரிந்துரைக்கப்பட்டது.

அப்படியாக கடந்த இரண்டு வருடங்களில் 60-க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் தேர்வாகி முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்று சாதனை படைத்தது.

அதையடுத்து அக்டோபர் 27; 2023 அன்று சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

படத்திற்கு ஆரம்பத்திலிருந்து ஆதரவு கொடுத்த வந்த இயக்குநர் ராமுக்கு நன்றி தெரிவித்துள்ள ’ரெளடி பிக்சர்ஸ்’ நயன்தாரா, விக்னேஷ் சிவன், ‘இந்த அப்பா மகன் பாசப்பிணைப்பு நிச்சயம் பார்வையாளர்களுக்கும் பிடிக்கும்’ என நம்பிக்கை தெரிவித்தனர்.

படக்குழு:- விக்னேஷ் குமுளை மற்றும் ஜெய பார்த்தி இருவரும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்க, ஞான் ஊட் மற்றும் சிஞ்சு கலை இயக்குநராக பணியாற்ற கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்திருக்கிறார். ஒலி வடிவமைப்பை எம்.ஏ. ஹரிபிரசாத் கவனித்திருக்கிறார்.

Latest articles

பெண்கள் தினத்தில் ‘பேட்ரியாட்’ படத்திலிருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் வெளியானது! 

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் 'பேட்ரியாட்' திரைப்படத்தில் முன்னணி நடிகை...

ஏப்ரலில் வெளியாகிறது 72 வயது மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா.’

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சிகளோடு வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு...

காதலில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களின் பக்கமிருந்து அணுகும் விறுவிறுப்பான ‘ஃபேக் ஐடி’ குறும்படம்… குட்டி ஸ்டோரி யூ டியூப் சேனலில் வெளியாகி குவிகிறது வரவேற்பு! 

https://www.youtube.com/watch?v=sFbVDGdJdyk தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன், அவனுக்கு தக்க பாடம் புகட்ட கடவுள்...

99/66 படத்தில் ரசிகர்களுக்கு திகில் அனுபவம் தந்த பின்னணி இசைக்கு கிடைத்த அங்கீகாரம்… அடுத்தடுத்த படங்கள், ஆல்பம் சாங்ஸ் என உற்சாகமாக பயணிக்கும் இசையமைப்பாளர் அமர்கீத்!  

தமிழ்த் திரையுலகில் இளைஞர்களின் காலம் இது. இந்த தலைமுறையின் ரசனைக்கேற்ப படங்களை இயக்குவதாகட்டும், பாடல்களைக் கொடுப்பதாகட்டும் புதியவர்களே அதிகம்...

More like this

பெண்கள் தினத்தில் ‘பேட்ரியாட்’ படத்திலிருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் வெளியானது! 

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் 'பேட்ரியாட்' திரைப்படத்தில் முன்னணி நடிகை...

ஏப்ரலில் வெளியாகிறது 72 வயது மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா.’

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சிகளோடு வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு...

காதலில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களின் பக்கமிருந்து அணுகும் விறுவிறுப்பான ‘ஃபேக் ஐடி’ குறும்படம்… குட்டி ஸ்டோரி யூ டியூப் சேனலில் வெளியாகி குவிகிறது வரவேற்பு! 

https://www.youtube.com/watch?v=sFbVDGdJdyk தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன், அவனுக்கு தக்க பாடம் புகட்ட கடவுள்...
error: Content is protected !!