‘லென்ஸ்’, ‘மஸ்கிடோபிலாஷபி’, ‘தலைக்கூத்தல்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் எழுதி இயக்கியிருக்கும் புதிய படம் ‘காதல் என்பது பொதுவுடமை.’
இந்த படம் இன்றைய நவீன காலகட்டத்தில் மனிதர்களின் உணர்வுகள், சமூகச் சூழல் மற்றும் விஞ்ஞானம் இவற்றுக்கு நடுவே மனிதர்களுக்குள் நவீனப்பட்டிருக்கும் காதலை வேறொரு கோணத்தில் பேசுகிறது.
படத்தில் லிஜோமோல், ரோகிணி, வினீத், கலேஷ் ராமானந்த், அனுஷா, தீபா உள்ளிடோர் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை கோவாவில் நடக்கும் இந்தியன் பனோரமாவின் 54வது உலக திரைப்படவிழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இந்திய மொழிகளில் பங்குபெற்ற 408 படங்களில் 25 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் இயக்குநர் ஜியோ பேபி வழங்க,‘மேன்கைன்ட் சினிமாஸ்’, ‘நித்திஸ் புரொடக்ஷன்’ மற்றும் ‘சிம்மட்ரி சினிமாஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
படக்குழு:-
தயாரிப்பு- ஜோமோன் ஜேக்கப், நித்யா அற்புதராஜா, டிஜோ அகஸ்டின், விஷ்ணு ராஜன், சஜின் எஸ் ராஜ்
ஒளிப்பதிவு – ஸ்ரீசரவணன்
இசை – கண்ணன் நாராயணன்,
பாடல்கள் – உமாதேவி
எடிட்டிங் – டேனி சார்லஸ்
கலை – ஆறுசாமி
காஸ்டியூம் – சுபஸ்ரீ கார்த்திக் விஜய்
சவுண்ட் டிசைன்- ராஜேஷ் சுசீந்திரன்
மக்கள் தொடர்பு – குணா