ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி இசையமைத்திருக்கும் திரைப்படம் கடைசி உலகப்போர்.’ மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ளது இந்த படம் மூலம் ஹிப் ஹாப் ஆதி தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
படம் வரும் செப்டம்பர் 20-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
நிகழ்வில், ஹிப் ஹாப் ஆதி பேசியபோது, ”என்னை அறிமுகம் செய்த சுந்தர் சி அண்ணா இங்கு வந்து எங்களை வாழ்த்தியது மகிழ்ச்சி. நட்டி சாருக்கு இப்படத்தில் மிக முக்கியமான ரோல், மிக சூப்பராக நடித்திருக்கிறார். சிங்கம் புலி அண்ணாவும் சிறப்பாக நடித்துள்ளார். சாரா, அனகா, அழகம்பெருமாள் என நிறையப் பேர் நடித்துள்ளார்கள். விஜயன் எனும் ஒரு துணை நடிகரை வில்லனாக நடிக்க வைத்துள்ளோம். அவர் கண்டிப்பாகப் பெரிய நடிகராக வருவார். இந்தப்படம் மற்ற படங்களிலிருந்து புதிதாக இருக்கும்.
இப்படி ஒரு படத்தை எடுக்க மிக முக்கிய காரணம் தொழில்நுட்ப கலைஞர்கள் தான், அனைவருக்கும் என் நன்றிகள். அர்ஜூன் மிக அட்டகாசமான விஷுவலை தந்துள்ளார். ஏகப்பட்ட செட் ஒர்க், வார் சீக்வன்ஸ் செய்துள்ளோம். நாகு சார் அட்டகாசமாக வேலை பார்த்துள்ளார். எடிட்டர் பிரதீப் அற்புதமாக எடிட் செய்துள்ளார். எங்கள் டீம் தான் மொத்த வேலையும் செய்துள்ளோம். ஜீவா தான் விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்துள்ளார். தயாரித்த அனுபவமே புதிது தான். ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே! எனும் சித்தர் வாக்கு தான் இந்தப்படத்தின் அடிப்படை, நாம் சண்டையிட்டுக்கொண்டால் உலகம் அழிந்து போய் விடும் என்பது தான் இப்படம். ரசிகர்களுக்குக் கண்டிப்பாக புதிய அனுபவமாக இருக்கும்” என்றார்.
இயக்குநர் சுந்தர் சி பேசியபோது, ”என்னிடம் வெறும் தன்னம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு வந்து, இன்று தயாரிப்பு நிறுவனம் வரை வளர்ந்து வந்திருப்பது மகிழ்ச்சி. ஆதியை மட்டும்தான் நான் அறிமுகப்படுத்தினேன், ஆனால் அவர் பல பேரை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் படத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை எனக்குத் தருமளவு, என் மீது அவர்கள் வைத்துள்ள மரியாதைக்கு நன்றி. அவர் இன்னும் மென்மேலும் வளர என் வாழ்த்துகள்” என்றார்.
நடிகர்கள் நட்டி நட்ராஜ், தலைவாசல் விஜய், நடிகர் அழகம் பெருமாள், சிங்கம்புலி, ஹரீஷ் உத்தமன், சாரா, குமரவேல், இளங்கோ குமணன், நடிகை அனகா, நடன இயக்குனர் கல்யாண், ஒளிப்பதிவாளர் அர்ஜுன்ராஜா உள்ளிட்டோரும் படம் குறித்துப் பேசினார்கள்.