Tuesday, October 8, 2024
spot_img
HomeCinemaநடுக்கடலில் சவாலான ஷூட்டிங்... கொண்டல் படம் பற்றி சொல்கிறார் நடிகர் ஷபீர் கல்லரக்கல்

நடுக்கடலில் சவாலான ஷூட்டிங்… கொண்டல் படம் பற்றி சொல்கிறார் நடிகர் ஷபீர் கல்லரக்கல்

Published on

ஷபீர் கல்லரக்கல் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ‘டான்ஸிங் ரோஸ்’ கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகு துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோத்தா’ மற்றும் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான நடிகர் நாகர்ஜூனாவின் ‘நா சாமி ரங்கா’ ஆகிய ஹிட் படங்களிலும் ஷபீர் தனது கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

தென்னிந்தியாவின் மிக முக்கிய நட்சத்திர நடிகர்களான பெப்பே, ராஜ் பி ஷெட்டி மற்றும் பலர் நடிக்கும் ‘கொண்டல்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிகர் ஷபீர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 80% நடுக்கடலில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட ஷபீர், “இந்தப் படம் சவாலாகவும் அதே சமயம் ஆச்சரியமாகவும் இருந்தது. தினமும் காலையில், நாங்கள் நடுக்கடலுக்குப் புறப்படுவோம். அது கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் எடுக்கும். படகில் படப்பிடிப்பு முடித்துவிட்டு மதிய உணவுக்காக கரைக்கு திரும்புவோம். உணவு சாப்பிட்டுவிட்டு, அதே இடத்திற்குச் சென்று மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்குவோம். இதில் பலருக்கும் கடல் ஒவ்வாமை ஏற்பட்டது. ஆனாலும், அதை எல்லாம் பெரிதுபடுத்தாமல் படப்பிடிப்பை சரியாக முடித்தோம். தயாரிப்பாளர்கள் எங்கள் அனைவரையும் தங்கள் குடும்பமாக கருதியதால், ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தேவையான வசதிகளை சிறப்பாக செய்து கொடுத்தனர். என் சினிமா பயணத்தில் இந்தப் படம் நிச்சயம் சிறப்பான ஒன்றாக இருக்கும். என்னுடைய கம்ஃபோர்ட் ஸோனில் இருந்து என்னை வெளியே கொண்டு வந்து சிறப்பான நடிப்பை இயக்குநர் வாங்கியுள்ளார்” என்றார்.

இந்தப் படத்தைத் தவிர, ஷபீருக்கு தமிழில் ஏ.ஆர்.முருகதாஸின் படம் மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தண்டகாரண்யம்’ ஆகிய படங்கள் கைவசம் உள்ளது. இதைத் தொடர்ந்து பெயரிடப்படாத ஒரு தெலுங்கு திரைப்படம் மற்றும் சிவராஜ்குமாரின் கன்னடப் படமான ‘பைரதி ரணகை’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளன.

Latest articles

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான ‘வாழை’ திரைப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் அக்டோபர் 11-லிருந்து ஸ்டிரீமாகிறது!

மாரி செல்வராஜின் ப்ளாக்பஸ்டர் வெற்றித்திரைப்படமான 'வாழை' திரைப்படத்தை வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் அக்டோபர் 11-ம் தேதியிலிருந்து...

இந்த படம் இளைஞர்களை கவர்வதோடு அவர்களின் மூளைக்கும் வேலை கொடுக்கும்! -பிளாக் பட பிரஸ் மீட்டில் நடிகர் ஜீவா பேச்சு 

ஜீவா, பிரியா பவானி சங்கர் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணி இயக்கியுள்ள பிளாக் படம் வரும் அக்டோபர் 11-ம்...

நடிகர் கே சி பிரபாத்துக்கு யாமம் படப்பிடிப்பில் ஹார்ட் அட்டாக்! சிம்ஸில் தொடரும் சிகிச்சை.

கே சி பிரபாத் பில்லா பாண்டி படம் மூலம் தமிழ்த் திரையுலகில்  தயாரிப்பாளராக கால்பதித்தார். அந்த படத்தில் நடிகராக...

தமிழ்நாடு முதலமைச்சரின் துணைவியார் துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்ற, சென்னை டிடிகே சாலை துளசி மெட்ராஸ் ஸ்டோர் திறப்பு விழா!

சென்னை டிடிகே சாலையில் உள்ள துளசி மெட்ராஸ் ஸ்டோர் திறப்பு விழாவின் சிறப்பு நிகழ்வில் தமிழகத்தின் புகழ்பெற்ற பிரமுகர்களான...

More like this