கீர்த்தி சுரேஷ் நடிப்பில், ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘ரகுதாத்தா’ இந்தி திணிப்பு மற்றும் ஆணாதிக்கத்தைப் பற்றிப் பேசும் படம். சுமன் குமார் இயக்கிய இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து ZEE5 ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 13 அன்று முதல் உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது.
இந்த பொழுதுபோக்கு டிராமா படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷுடன் முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.
சமூகப் பிரச்சினைகளின் வேரை ஆராயும் கதைக்களத்தில், மெலிதான நகைச்சுவையுடனும் அழுத்தமான திரைக்கதையுடனும், ஒரு புரட்சிகரமான பெண்ணின் பயணத்தைச் சொல்லும் இந்த தமிழ்ப் படம் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் டப் செய்யப்பட்டு ஸ்ட்ரீமாகும்.