Thursday, March 27, 2025
spot_img
HomeCinema'கனா காணும் காலங்கள்' சீசன் 3-ன் ரிலீஸ் தேதி அறிவிப்புக்காக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியிட்ட பெப்பி...

‘கனா காணும் காலங்கள்’ சீசன் 3-ன் ரிலீஸ் தேதி அறிவிப்புக்காக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியிட்ட பெப்பி பாடல்!

Published on

இளமைக்கால நினைவுகளைப் போற்றும் பொழுதுபோக்கு சீரிஸான கனா காணும் காலங்கள்’ சீரிஸின் மூன்றாவது சீசனை, இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகஸ்ட் 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

இந்த இந்த சீரிஸில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் பங்கு பெற்ற ‘நியூ ஏஜ் நியூ பேட்ச்’ எனும் அட்டகாசமான பெப்பி பாடலை வெளியிட்டு, அறிவித்துள்ளது.

கென் ராய்சன் இயக்கிய இந்தப் பாடலை, ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் பாடியுள்ளனர். அரவிந்த் அன்னெஸ்ட், ஷிபி சீனிவாசன், விக்ரம் பிட்டி, ஆர்த்தி அஷ்வின், கவிதா மற்றும் ஸ்ரீ ராதா ஆகியோர் அடங்கிய குழுவினர் குரல் கொடுத்துள்ளனர். ஒளிப்பதிவு – AJ திப்பு, நடன இயக்கம் – அப்சர். ஃபுளூட் நவின் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

‘கனா காணும் காலங்கள்’ முதலில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒரு சீரியலாக ஒளிபரப்பப்பட்டது. பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பள்ளி வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் கதைக்களம், மக்கள் மத்தியில் உடனடி ஈர்ப்பை ஏற்படுத்தியதுடன், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த சீரிஸ் அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவர்களது வாழ்வியலைக் காட்டியதால், மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியது.

இந்த சீரியல் பார்வையாளர்கள் மீது ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தைப் புரிந்துகொண்ட டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஏப்ரல் 22, 2022 அன்று அதன் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், பிரபலமான டிவி சீரியலை மீண்டும் ஒரு சீரிஸாக வழங்கியது.

இந்த சீரிஸின் முதல் சீசனுக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பு மற்றும் அதிக எபிசோட்களை வேண்டிய ரசிகர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து டிஸ்னி ஹாட்ஸ்டார் கடந்த ஆண்டு ஏப்ரல் 21 அன்று, சூப்பர்ஹிட் சீரிஸின் இரண்டாவது சீசனை வெளியிட்டது.

இரண்டாம் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம், பள்ளி மாணவர்களை மையமாக வைத்து உருவாகும் இந்த சீரிஸின், மூன்றாவது சீசனை வெளியிடுவதாக அறிவித்தது.

முதல் மற்றும் இரண்டாவது சீசன்களைப் போலவே, இந்த மூன்றாவது சீசன், ரசிகர்களை ஈர்க்கும் பொழுதுபோக்கு அம்சங்களுடன், இன்றைய மாணவர்களின் மகிழ்ச்சிகள், கண்ணீர், அச்சங்கள், ஆச்சரியங்கள், வலிகள் மற்றும் சிலிர்ப்புகள் என அனைத்தையும் ஒருங்கிணைத்த ஒரு அருமையான கதையுடன், அவர்களின் வாழ்வை படம்பிடித்து காட்டவுள்ளது.

Latest articles

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலில் கிடைத்த அமோக வரவேற்பு… உற்சாகத்தில் படக்குழு!

  விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்துக்கு அற்புதமான...

நடிகர் ராம்சரண் _ இயக்குநர் புச்சிபாபு சனா இணையும் ‘பெடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! 

  'குளோபல் ஸ்டார்' ராம்சரண், தேசிய விருது பெற்ற 'உப்பென்னா' படத்தின் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில் 'பெடி' (PEDDI)...

More like this

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலில் கிடைத்த அமோக வரவேற்பு… உற்சாகத்தில் படக்குழு!

  விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்துக்கு அற்புதமான...