அப்பா, மகன் உறவை உணர்வுபூர்வமான கோணத்தில் அணுகும் புதிய படத்தில் சமுத்திரக்கனி முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.
பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்கும் இந்த படத்திற்கு ‘விமானம்’ படத்தின் இயக்குநர் சிவபிரசாத் கதை எழுதியுள்ளார். இதுவரை யாரும் சொல்லாத தனித்துவமான கருத்தை கொண்டிருக்கும் படமாக உருவாகிறது.
இந்த படத்தின் துவக்கவிழா பூஜையுடன் ஹைதராபாத்தில் நடந்தது. ‘டியர் காம்ரேட்’ திரைப்பட இயக்குநர் பரத், இயக்குநர் சுப்பு, சிவபாலாஜி ஆகியோர் கிளாப் அடித்து தொடக்கி வைத்தனர். சுதீர், சம்மக் சந்திரா, தாகுபோத்து ரமேஷ், மது நந்தன், கயூம், பூபால், பிரித்வி, ராக்கெட் ராகவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
படப்பிடிப்பு வரும் நவம்பர் 9-ம் தேதி துவங்கி ஹைதராபாத், சென்னை, மதுரை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் நடைபெறவிருக்கிறது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவிருக்கிறது.
படக்குழு:-
இசை – அருண் சிலுவேறு
ஒளிப்பதிவு – துர்கா பிரசாத்
கலை – டௌலூரி நாராயணா.
வசனம் – மாலி
படத்தொகுப்பு – மார்த்தாண்டம் கே வெங்கடேஷ்
நிர்வாகத் தயாரிப்பு – தீபிரெட்டி மஹிபால் ரெட்டி
மக்கள் தொடர்பு – குணா