Friday, March 28, 2025
spot_img
HomeCinema6-ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட 6 தருணங்கள்... 'கூடசாரி' நாயகன் அடிவி சேஷ் எக்ஸ் தளத்தில்...

6-ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட 6 தருணங்கள்… ‘கூடசாரி’ நாயகன் அடிவி சேஷ் எக்ஸ் தளத்தில் உற்சாகம்!

Published on

‘கூடசாரி’ படத்தின் 6-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில்,  நடிகர் அடிவி சேஷ், தனது எக்ஸ் தளத்தில் புது அறிவிப்புகளை பகிர்ந்து ரசிகர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

முதல் பாகத்தின் புகழைக் கட்டிக்காக்கும் வகையில் , G2 பல புதுமையான அம்சங்களுடன் உயர்தரத்தில் உருவாகிறது. 40% படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தயாரிப்பாளர்கள் படத்திலிருந்து ஆறு ஸ்டைலான அதிரடி தருணங்களை வெளியிட்டுள்ளனர். இது படத்தின் சர்வதேச தர உருவாக்கத்தையும் மற்றும் நுட்பத்தையும் முன்னிலைப்படுத்துகிறது. G2 இன் இந்த தருணங்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய தளத்திலும் தனித்து நிற்கும், ஒரு ஸ்பை த்ரில்லரை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு மிக்க முயற்சியைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

இப்படம் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. G2 அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும், பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது. இப்படத்தை வினய் குமார் சிரிகினிடி இயக்குவதோடு, முன்னணி நாயகன் அடிவி சேஷுடன் இணைந்து படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார். வெவ்வேறு மொழிப் பின்னணியில் இருந்து வரும் பார்வையாளர்களின் உணர்வுகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இருக்கை நுனியில் அமர்ந்து ரசிக்கும் பரபர அனுபவத்தை வழங்கும் வகையில், படம் சிறப்பான படைப்பாக இருக்க வேண்டும் என்பதில், தயாரிப்பாளர்கள் உறுதியாக உள்ளனர்.

இதுபற்றி அடிவி சேஷ் பேசியபோது, “கூடசாரி’ பல சிறப்புகள் மிக்க படம். காலப்போக்கில் அப்படத்தின் பாரம்பரியமும், புகழும் இன்னும் இன்னும் பெரிதாகி வருகிறது. கடந்த 6 வருடங்களில் ஒரு வாரம் கூட அப்படம் குறித்த பாராட்டுக்களைக் கேட்காமல் நான் இருந்ததில்லை. G2 இன்னும் பெரியதாக இருக்கும், சர்வதேச அளவில் இருக்கும், G2 வில் அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு பெரிய விஷுவல் விருந்து காத்திருக்கிறது என்றார்.

இயக்குநர் சிரிகினீடி பேசியபோது “தற்போது தயாரிப்பில் 40% நிறைவு செய்திருக்கிறோம், இதுவரை நாங்கள் படமாக்கிய பகுதிகள், மிகச்சிறப்பாக வந்துள்ளன. அதன் தரம் மற்றும் நுட்பத்தில் மிகுந்த திருப்தியுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறோம். பார்வையாளர்களுக்கு பிரமிக்க வைக்கும் உலகத்தை உருவாக்குவதில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறோம், பரபரப்பான காட்சித் தருணங்கள் முதல், டைனமிக் ஆக்ஷன் காட்சிகள் வரை, ஒவ்வொரு பகுதியும் பார்வையாளர்களை புதிய உலகத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் டிராமா வகையைச் சேர்ந்த அனைத்து ரசிகர்களுக்கும், இந்தப் படம், பெருமைப்படக்கூடிய அனுபவமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் டி.ஜி.விஸ்வ பிரசாத் மேலும் பேசியபோது, “பீப்பிள் மீடியா ஃபேக்டரிக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்த “கூடசாரி” திரைப்படத்தின் 6வது ஆண்டு விழாவை இன்று கொண்டாடுகிறோம். 40% படப்பிடிப்புடன் “G2″ சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த இரண்டாம் பாகம் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும். மேலும், ‘G2’ படத்திற்காக பெரும் பட்ஜெட்டில் ஒரு ஆடம்பரமான சண்டைக் காட்சியை நாங்கள் சமீபத்தில் படமாக்கினோம் ஆத்வி சேஷின் நடிப்பு மற்றும் எங்கள் குழுவின் அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன், இப்படம் சர்வதேச தரமிக்க படைப்பாக வரும் என்று நம்புகிறோம். இப்படம் முன்னெப்போதும் இல்லாத சிலிர்ப்பான சாகசமாக இருக்கும்.”

தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் பேசியபோது “ஜி2 எங்களின் மிகவும் மதிப்புமிக்க படைப்புகளில் ஒன்றாகும். உலகத்தரம் வாய்ந்த தயாரிப்பைக் கொண்டுவர சேஷ், வினய் மற்றும் குழுவினர் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். திரைக்கதை பிரமாண்டத்தைக் கோருகிறது, மேலும் படத்தை உருவாக்க நாங்கள் முழு உழைப்பையும் தந்து வருகிறோம். இப்படத்தின் ஒரு காட்சிக்கு செல்வான தொகை, கோடாச்சாரியின் மொத்த பட்ஜெட்டைத் தாண்டியது.

G2 படக்குழுவினர் முதல் பாகத்தை காட்டிலும் சிறப்பான படத்தை தர வேண்டுமென்கிற உத்வேகத்தில் முழு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றனர். சஸ்பென்ஸ் நிறைந்த பரபர சீட் எட்ஜ் திரில்லர் அனுபவத்தை வழங்க, ஒவ்வொரு விசயத்தையும் மிக மிக கவனமாக செய்து வருகின்றனர். உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை மகிழ்விக்கும், ஒரு அற்புதமான திரைப்படத்தை உருவாக்குவதே எங்களது குறிக்கோள்” என்றார்.

Latest articles

காமெடி படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு என்பதை மனதில் வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்! -‘கொஞ்சநாள் பொறு தலைவா’ படத்தின் டிரெயலர் வெளியீட்டு விழாவில் ஆருத்ரன் பிக்சர்ஸ் கலியமூர்த்தி பேச்சு

அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், ஆருத்ரன் பிக்சர்ஸ் எஸ் முருகன் தயாரிப்பில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள 'கொஞ்ச...

ராணுவ வீரரின் காதல் கதையில் உருவாகும் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ படத்துக்கு கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை!

அனுராதா அன்பரசுவின் ஏஏஏ பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி.' இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா பின்னணி இசையமைத்தால்...

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலில் கிடைத்த அமோக வரவேற்பு… உற்சாகத்தில் படக்குழு!

  விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்துக்கு அற்புதமான...

More like this

காமெடி படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு என்பதை மனதில் வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்! -‘கொஞ்சநாள் பொறு தலைவா’ படத்தின் டிரெயலர் வெளியீட்டு விழாவில் ஆருத்ரன் பிக்சர்ஸ் கலியமூர்த்தி பேச்சு

அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், ஆருத்ரன் பிக்சர்ஸ் எஸ் முருகன் தயாரிப்பில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள 'கொஞ்ச...

ராணுவ வீரரின் காதல் கதையில் உருவாகும் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ படத்துக்கு கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை!

அனுராதா அன்பரசுவின் ஏஏஏ பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி.' இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா பின்னணி இசையமைத்தால்...

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....