Monday, April 21, 2025
spot_img
HomeCinemaஹிப்ஹாப் தமிழா ஆதியின் கடைசி உலகப்போர் படத்தின் கிளிம்ஸ் லண்டனில் வெளியானது!

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் கடைசி உலகப்போர் படத்தின் கிளிம்ஸ் லண்டனில் வெளியானது!

Published on

ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, இயக்கி, இசையமைத்திருக்கும் புதிய படம் ‘கடைசி உலகப்போர்.’ நாசர், நட்டி, அனகா, என். அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன், சிவா, ஷரா, குஹன் பிரகாஷ், ராக்கெட் ராஜேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ, லண்டனில் புகழ்மிகு OVO Arena Wembley-ல், ஹிப் ஹாப் தமிழா இசைக் கச்சேரியோடு ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஒரு தமிழ்ப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ப்ஸே வெளியாவது இதுவே முதல் முறை!

ஃபர்ஸ்ட் லுக்கில் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் முகத்துக்குப் பின் பீரங்கி, விமானம், சிதிலமடைந்த போர்க்களம் என இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இணையம் முழுக்க ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தை வெளியிடுவதற்கான ணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.

மீசைய முறுக்கு, சிவக்குமாரின் சபதம் படங்களுக்கு பிறகு ஆதி இயக்கும் மூன்றாவது படம் இது. அவர் தயாரித்துள்ள முதல் படம் இது.

படக்குழு:-
ஒளிப்பதிவு: அர்ஜுன்ராஜா
எடிட்டர்: பிரதீப் E ராகவ்
கலை இயக்குநர்: ஆர் கே நாகு
சண்டைப் பயிற்சி: மகேஷ் மேத்யூ
பாடல்கள்: ஹிப்ஹாப் தமிழா, விக்னேஷ் ஸ்ரீகாந்த், FOTTY SEVEN, சிவவாக்கியார்
ஒலி வடிவமைப்பாளர்: ராகவ் ரமேஷ், ஹரி பிரசாத்
VFX : 85FX
ஆடை வடிவமைப்பு: கீர்த்தி வாசன்
தயாரிப்பு மேற்பார்வை: சி.ஹரி வெங்கட்
நிர்வாக மேலாளர்: டி என் கோகுல்நாத், S. பார்த்திபன்
நிர்வாக தயாரிப்பு: வாசுதேவன்
மக்கள் தொடர்: எஸ்2 மீடியா சதீஷ் குமார்

Latest articles

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...

 தனுஷ், சேகர் கம்முலா கூட்டணியின் ‘குபேரா’ படத்திலிருந்து ‘போய்வா நண்பா’ பாடல் வெளியானது!

தனுஷ் நடித்துள்ள 'குபேரா'வின் முதல் பாடல் 'போய்வா நண்பா' வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல்...

More like this

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...
error: Content is protected !!