பிரபல டான்ஸ் மாஸ்டர் தினேஷ் கதாநாயகனாகவும், ஸ்வேதா டோரத்தி கதாநாயகியாகவும் நடிக்கும் படம் ‘கரும்புள்ளி கிராமம்.’
ராசா ஆனந்த் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ஜெய்பீம் மொசக்குட்டி, கவிதா, ரவி, ஜானகி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
ஒரு சிறிய கிராமத்தில் உண்மையாக நடந்த ஒரு காதல் கதையை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.
வி எஸ் ஃபிலிம்ஸ் மேக்கர்ஸ், அனகா பிக்சர்ஸ்’ எஸ் ஜெயபாலா, ஜி சுகன்யா இணைந்து தயாரிக்கின்றனர்.
ஒளிப்பதிவு வெற்றிவேல் முருகன் ஒளிப்பதிவு செய்ய, ஜெகன் கல்யாண் இசையமைக்கிறார். எடிட்டிங் பணிகளை ராஜேந்திர சோழன் கவனிக்கவுள்ளார்.