புதிய தலைமுறை தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 4:30 மணிக்கும் இரவு 9.30 மணிக்கும் ஒளிபரப்பாகி வரும் க்ரைம் நிகழ்ச்சி ‘குற்றம் குற்றமே.’
அன்றாடம் நிகழும் குற்றச்சம்பவங்கள் குறித்த செய்திகளை வெறுமனே தொகுத்து வழங்காமல், அக்குற்றத்தின் துவக்கப்புள்ளி எங்கே ஆரம்பித்தது, குற்றவாளியின் நோக்கம் என்னவாக இருந்தது, குற்றத்தை செய்யத் தூண்டிய அம்சம் என்ன, போலீஸ் தரப்பு விளக்கம் என அனைத்தையும் இந்த நிகழ்ச்சி பேசும். குற்றம் நிகழ்ந்தது எப்படி என்பது மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாக அதனை எப்படி எதிர்கொள்வது அல்லது மீண்டு வருவது என்பது குறித்தும் விளக்குவது இதன் சிறப்பம்சம்.
இந்த நிகழ்ச்சியை விக்ரம் ரவிசங்கர் தொகுத்து வழங்குகிறார்.